Monday, March 21, 2011

இறுதிக்கட்ட போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைகள் அவசியம் - பிரிட்டன் எம்.பி. வலியுறுத்து

இறுதிக்கட்ட போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைகள் அவசியம் - பிரிட்டன் எம்.பி. வலியுறுத்துவன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இலங்கைப் படைத்தரப்பால் நிகழ்த்தப்பட்டது எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


இது குறித்து பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் இல்போ்ட் வடக்கு நாடாளுமன்ற லீ ஸ்கோர்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இப் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதே சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க செனட்சபை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை இராஜாங்க அமைச்சர் ரொப்ர்ட் ஓ பிளேக் வெளியிட்ட கருத்துக்களை சுட்டிக்காட்டியே லீ ஸ்கோர்ட், போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் பொருளாதார தடைகளை எதிர்கொள்வதற்கு நிர்ப்பந்திக்கப்படும் எனவும் இவ்வறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளையும் நீதியையும் பெற்றுக்கொள்வதற்கு நீண்டகாலம் காத்திருப்பதாக இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள லீ ஸ்கோர்ட் தமிழ் மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மேலும் மோசமடைந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment