சமீபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் இருந்த சில புகைப்படங்களையும், ஒரு சில வீடியோக்களையும் அதிர்வு இணையம் பெற்றுக்கொண்டுள்ளது. நாம் ஏற்கனவே வெளியிட்ட "மண்வெட்டியால் பெண் போராளிகளைக் கொலைசெய்த இலங்கை இராணுவம்" என்ற தலைப்பில் பல புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் இருக்கும் பல புகைப்படங்களும் வெளியிட முடியாத அளவு கோரமான வீடியோக் காட்சி ஒன்றையும் நாம் ஜ.நாவிற்கு அனுப்பிவைத்துள்ளோம். தற்போது இங்கே எமக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்கள் குறித்து முழுமையான விசாரணை நடைபெறவேண்டுமாயின், பொதுமக்களாகிய உங்களின் உதவி வேண்டும் என்பதனை நாம் அறியத்தர விரும்புகிறோம்.
புகைப்படத்தில் நீல நிற சாரத்துடன் தமிழர் ஒருவரை இராணுவம் அழைத்து வருகிறது. இப் புகைப்படமானது மே 18ம் திகதி 2009ம் ஆண்டு மாலை சரியாக 6.20 எடுக்கப்பட்டுள்ளது. இதனை இப் படத்தில் உள்ள மீட்டா டாக்(Meta-Tag) எனப்படும் பதிவு மூலம் நாம் உறுதிசெய்துள்ளோம். இப் புகைப்படத்தில் காணப்படுபவரை பின்னர் இராணுவத்தினர் கைகள் கட்டப்பட்ட நிலையில் உட்கார வைத்துள்ளனர். (அப்படம் 2வதாக இருக்கிறது). இந்த 2வது படம் ஏற்கனவே வெளியாகியிருந்தது இதில் ஒருவர் கொல்லப்பட்டும் உள்ளார். இந்த நீல நிற சாரம் உடுத்தவர் இறுதியாகக் கிடைத்த புகைப்படத்தில் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, (கடற்புலிகளின் தளபதி கேணல் சூசை என்று இலங்கை அரசு வெளியிட்ட படத்துக்கு) உடலுக்கு பக்கத்தில் போடப்பட்டும் உள்ளார்.
(புதிய இணைப்பு) இவர் சபா என்று அழைக்கப்படுபவர் என அடையாளம் கானப்பட்டுள்ளார். இவர் பொட்டு அம்மானுக்கு கீள் இயங்கிவந்ததாக தற்போது அறியப்படுகிறது. சரணடைந்த புலிகளின் உறுப்பினர்களை போர் மரபுகளை மீறி கொண்றுள்ள இராணுவத்துக்கு எதிராக போர்குற்ற நடவடிக்கைகளை எடுக்க இப் புகைப்படங்கள் ஏதுவாக இருக்கும்.
இப் புகைப்படத்தில் நீல நிற சாரத்துடன் வருபவரை யாராவது அடையாளம் கணடால் எம்மோடு தொடர்புகொள்ளுங்கள். அத்தோடு இதில் அவரை அழைத்துவரும் இராணுவ அதிகாரி யார் என எவருக்காவது தெரிந்தாலும் எம்மைத் தொடர்புகொண்டு விபரங்களை தருமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கிறோம். இக் கொலைகள் தொடர்பாக நாம் சில புகைப்பட ஆதாரங்களைத் திரட்டியுளோம். இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட தேதிகளை சுயாதீன தடயவியல் நிபுணர்களிடன் காட்டி அதற்கான சான்றிதழ்களைப் பெறுவதிலும் நாம் ஈடுபட்டுள்ளோம். பெரும் பொருட்செலவு இதற்கு தேவைப்படுவதால் மக்களின் நன்கொடைகளையும் நாம் இவ்வேளையில் எதிர்பார்க்கிறோம்.
கைகள் கட்டப்பட்டு, தமிழ் இளைஞர்கள் சுடப்பட்ட காட்சிகள் சனல்- 4 தொலைக்காட்சியில் வெளியாகியிருந்தது. ஆனால் அதே பகுதியில் ஒரு தாயையும் மகனையும் சேர்த்து இராணுவம் சுட்டுள்ளது. இது, இதுநாள்வரை வெளிவராத விடையமாகும். அது தொடர்பான ஆதாரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை நாம் பிரசுரிப்பதால் இலங்கை அரசும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் கைக்கூலிகளும், எமது இணையம் மீது தாக்குதல் நடத்தலாம். இல்லையேல் இவற்றை முடக்க பெரும் நடவடிக்கையில் ஈடுபடலாம். அவற்றை எல்லாம் உடைத்து தடைகளைத் தாண்டி நாம் இந்த ஆதாரங்களை ஆராய்ந்து ஜ.நா, மற்றும் மனிதநேய அமைப்புகள், ஏன் தேவைப்பட்டால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலும் சமர்ப்பிக்க தயாராகி வருகிறோம்.
முள்ளிவாய்க்காலில், 40,000 பொதுமக்கள், புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவியர் என வகை தொகை இன்றி இலங்கை இராணுவம் தமிழர்களைக் கொண்றுகுவித்துள்ளது. இவர்களின் இந்த யுதக்குற்றங்களை உலகிற்கு அம்பலப்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே உங்களால் ஆன பங்களிப்பை எமக்குச் செய்யுங்கள். நீங்கள் தரும் ஒவ்வொரு சதமும் கொடூரமாக கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க, இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதிகேட்க, நடத்தப்பட்ட இன அழிப்பை தட்டிக்கேட்க உதவும். கீழ் காணும் பே பால் மூலம் உங்கள் உதவித் தொகையை நீங்கள் வழங்கலாம். இதன் மூலம் பெறப்படும் காசும் அதன் விபரங்களும் செலவிடப்பட்ட விதமும், அதனால் நாம் முன்னெடுத்த நடவடிக்கை என்ன என்பதனை, நாம் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் மாதம் தோறும் அனுப்பி வைப்போம்.
எம்மிடம் இருக்கும் வேறு ஆதாரங்களை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் எம்மைத் தொடர்புகொள்ளவும். அவற்றை நாம் தமிழ் மக்களால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்பிடம் கையளிக்கவும் தயாராக இருக்கிறோம் என்பதனையும் தெரியப்படுத்த விரும்புகிறோம்.
No comments:
Post a Comment