கனடாவின் முக்கிய அரசியல் கட்சியொன்று விடுதலைப் புலிகளுடன் தொடர்பைக் கொண்டிருப்பதாக கனடாவின் முன்னணி பத்திரிகையான குளோப் அண்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
தென்னாசியா வம்சாவளியினரின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக கனடாவின் முக்கிய அரசியல் கட்சியான ப்ரோக்கிரசிவ் கன்சர்வேட்டிவ் கட்சியானது விடுதலைப் புலிகளுடன் எஞ்சியுள்ள தரப்பினருடன் தொடர்புகளைப் பேணி வருவதாக கனேடிய குளோப் அண்ட் மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
டிம் ஹுடெக் இன் தலைமையிலான பிரஸ்தாப கட்சியானது 2009ம் ஆண்டில் யுத்தம் இலங்கையில் நிறைவுக்கு வந்தபின் விடுதலைப் புலிகளுடனான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தமிழ் குடியேற்றவாசிகள் மற்றும் பயங்கரவாதம் என்பன தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்தத் தொடர்பு வலுப்பெற்றிருப்பது முக்கிய விடயமாகும்.
ஒன்டாரியோ பிராந்திய தோ்தலுக்காக அக்கட்சி முன்னிறுத்தியுள்ள வேட்பாளர்களான ஷான் தயாபரன் மற்றும் ராகவன் பரஞ்சோதி ஆகியோர் மட்டுமன்றி அவர்களின் நெருங்கிய நண்பர்கள், ஆதரவாளர்களும் விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதாகவும், அதனுடன் இணைந்து செயற்பட்டிருப்பதாவும் அப்பத்திரிகை மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
அதிலும் ராகவன் பரஞ்சோதி என்பவர் 2009ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே ப்ரோக்கிரசிவ் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளிருந்தே அவர்களுக்கு எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ளது. அக்கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரான போல் கலண்ட்ரா என்பவர் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டமொன்றில் விடுதலைப் புலிகளுடன் நேரு குணரத்தினம் என்பவரைக் கண்டதும் மெதுவாக நழுவிச் சென்றுள்ளார்.
அவ்வாறான ஒருவருக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் அவர் ஏற்பாட்டாளர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment