பிரிவினை கோரிய தமிழ்ப் போராளிகளுக்கு எதிரான இறுதிப்போரில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக போர்க்குற்ற விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றின் முன்பாக சிறிலங்கா நிறுத்தப்படக் கூடும் என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்.
‘ஸ்கை நியூஸ்‘ தொலைக்காட்சிக்கு வொசிங்டனில் அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை சிறிலங்கா எதிர்கொள்ளும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.
“சிறிலங்கா அனைத்துலக ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க- மேம்பட்ட விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால் அனைத்துலக விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த விடயத்தில் சிறிலங்கா அனைத்துலக தரத்துடனான விசாரணைகளை நடத்தத் தவறினால்- அனைத்துலக ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கும்.
சிறிலங்காவுடனான நெருக்கத்தை வலுப்படுத்துவதற்கான முக்கிய விடயங்களாக நல்லிணக்கமும், பொறுப்புக் கூறுதல், மனிதஉரிமைகள் ஆகியவற்றை அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
போரின் இறுதி சில மாதங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பீடு செய்துள்ளது.
அதேவேளை, சிறிலங்காவை லிபியாவுடன் நான் ஒப்பிடவில்லை.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment