இந்நிலையில் ஜெயலலிதாவை தேநீர் விருந்துக்காக டெல்லி வருமாறு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.
வெற்றிபெற்ற தலைவர்களை சோனியா இதுபோன்று தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுப்பதில்லை என்பதால் இந்த அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இது திமுகவிடம் இருந்து விலகிச் செல்வதற்கான காங்கிரஸின் புதிய வியூகமாகக் கருதப்படுகிறது.
மத்தியில் ஆட்சியைக் காப்பாற்ற இவ்வளவு நாளும் காங்கிரசுக்கு முண்டு கொடுத்து வந்த கருணாநிதிக்கு ஆப்பு வைக்க தயாராகிவிட்டார் சோனியா என்பதையே இந்த அழைப்பு எடுத்துக் காட்டுகிறது.. நிறம் மாறுகிறதா இந்திய அரசியல்?
No comments:
Post a Comment