கொழும்பு, மே 15- இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐநாவின் அறிக்கைக்கு சுவிட்சர்லாந்து அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இத்தகவலை கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இதனிடையே இலங்கை தொடர்பான ஐநாவின் அறிக்கை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை ஜெனீவாவில் இணைந்து நடத்த சுவிஸ் அரசும், கனடா அரசும் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது என்றும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதர் தாமஸ் லிட்சர், கனடா தூதர் புரூஸ் லெவி ஆகியோரிடம் இலங்கை அரசு தனது எதிர்ப்பை நேரில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
source :dinamani
No comments:
Post a Comment