தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நியாயத்தைப் பெறவும் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருப்பது மிகப்பெரும் இன அழிப்பே என்பதனை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையிலும் மே 18 ஆம் நாளை ‘தமிழர் இனவழிப்பு நினைவுநாள்' என நினைவு கூர்வதுடன் இந்நாளையொட்டி நிகழ்த்தப்படும் அனைத்துப் போராட்ட வடிவங்களிலும் உலகில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்துகொண்டு ஒன்று திரண்டு குரல்கொடுக்குமாறும் தமிழீழ விடுதலைப்புலிகள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கொள்கின்றோம்.
இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பு வருமாறு.
தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/03/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 03/05/ 2011.
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2011
அன்பான தமிழ் மக்களே,
காலங்காலமாக தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. மொழிச் சீரழிப்புக்கள், படுகொலைகள், நில ஆக்கிரமிப்புக்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் உட்பட மனித நாகரிகத்திற்குப் புறம்பான அனைத்து வகையிலுமான அடக்குமுறைகளையும் ஆக்கிரமிப்பாளர்கள் நிகழ்த்தி வருகின்றனர். இவையனைத்தும் ஒட்டுமொத்தமாக தமிழினத்தை அதனது பூர்வீக மண்ணில் இருந்து வேரோடு கருவறுக்கும் இனவழிப்பின் நடவடிக்கைகளே ஆகும்
இந்த இனவழிப்பின் ஓரங்கமாக வன்னிப்பகுதியில் சிங்கள பெளத்த பேரினவாத அரசினால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் மனிதப்படுகொலைகளும், பேரவலங்களும் சொற்களில் விளக்கிட முடியாதவை. இந்த வகையில் தமிழினத்தின் மீது ஏவிவிடப்பட்ட இனவழிப்பின் உச்சக்கட்டமாக 2009 மே மாதம் நிகழ்ந்த ”முள்ளிவாய்க்கால் பேரவலம்” திகழ்கின்றது.
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நியாயத்தைப் பெறவும் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருப்பது மிகப்பெரும் இன அழிப்பே என்பதனை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையிலும் மே 18 ஆம் நாளை ‘தமிழர் இனவழிப்பு நினைவுநாள்' என நினைவு கூர்வதுடன் இந்நாளையொட்டி நிகழ்த்தப்படும் அனைத்துப் போராட்ட வடிவங்களிலும் உலகில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்துகொண்டு ஒன்று திரண்டு குரல்கொடுக்குமாறும் வேண்டிக் கொள்கின்றோம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
No comments:
Post a Comment