உறவோடும் கலந்து விட்ட தேச விடுதலைப்பாடல் போட்டி டென்மார்க் கலைபண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டது. பொதுச்சுடர் ஏற்றம், அக வணக்கத்துடன் தேசியக்கொடியேற்றி ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு மழலையர், இளம் மற்றும் தேசத்தின்குயில் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. தமிழீழ இசைக்குழு இசை வழங்க போட்டியாளர்கள்; மிகவும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இலண்டனிலிருந்து வருகை தந்த மூன்று இசை ஆசிரியர்களாகிய சங்கீதரட்ணம் திருமதி பொன்னையா ஜெயஅழகி, இசைக்கலைமணி திருமதி.சுமதி சிவமோகன், இசைக்கலைமணி செல்வி யசோதா மித்ரதாஸ் ஆகியோர் நடுவர்களாக கலந்து சிறப்பித்தனர். மழலையர் பிரிவில் 3ம் இடத்தை பிரித்தி பாலராசாவும், 2ம் இடத்தை மாலதி ஜெயானந்தனும், 1ம் இடத்தை சிறீத்திக் சதீசும், இளம்பிரிவில் 3ம் பரிசை நிதர்சனா நாகேந்திரமும், 2ம் பரிசை சுகன்யா ஜெயமும் 1ம் பரிசை அருண்ணியா இராசசிங்கமும், தேசத்தின்குயில் பிரிவில் 3ம் பரிசை செல்வரட்ணம் திருநாவுக்கரசும், 2ம் பரிசை ராகவி தங்கராசாவும், 1ம் பரிசை சுஜித்தா மயில்வாகனமும் தட்டிச் சென்றார்கள். 1ம் பரிசை பெற்றவர்கள் மாவீரர் நாள் நிகழ்வில் பாடும் சந்தர்ப்பத்தை பெற்றிருக்கின்றார்கள். அத்தோடு தொடர்ச்சியாக 3 வருடமும் சுற்றுக் கிண்ணத்தை தட்டிச் சென்றால் அக்கிண்ணம் அவருக்கே வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான சுற்றுக்கிண்ணத்தை சுஜித்தா மயில்வாகனம் தட்டிச்சென்றார்.
சிறப்பு நடனத்தை எறிதளல் குழுவினர் வழங்கியிருந்தனர். அறிவிப்பை ஊடகவியலாளரான திரு. பராபிரபா மிக சிறப்பாக வழங்கினார். போட்டியாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment