Tuesday, May 31, 2011

பயங்கரவாத இல்லாதொழிப்பு குறித்த அனுபவங்களை பகிரும் மாநாட்டில் முக்கிய நாடுகள் பங்கேற்கவில்லை – ஏ.எப்.பீ

பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நாளைய தினம் நடைபெறவுள்ள கருத்தரங்கில் சில முக்கிய நாடுகள் பங்கேற்கவில்லை என ஏ.எப்.பீ ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் 54 நாடுகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும் இதில் 12 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பிலான அனுபவங்கள் ஏனைய நாடுகளுக்கு உதவியாக அமையும் என இலங்கை அறிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.

சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment