Sunday, May 08, 2011

சிவாஜிலிங்கத்தை இராணுவத்தினர் கடுமையா அச்சுறுத்தியுள்ளனர் !


முந் நாள் தமிழ் தேசிய நடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஜிலிங்கத்தை இராணுவத்தினர் தமது முகாமுக்கு அழைத்துச் சென்று, விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தியுள்ளனர். வல்வெட்டித்துறை நகரத்தில் உள்ள இராணுவக் காவலரன், மற்றும் சிறிய முகாம்கள் அகற்றப்படவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார். வர இருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேர்தல் விஞ்ஞாபனமாக சிவாஜிலிங்கம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவே இராணுவம் ஆத்திரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வியாளக்கிழமை அவரை அழைத்த இராணுவம் விசாரணை என்ற பெயரில் அவரை அச்சுறுத்தியுள்ளதாக யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் சிவில் நிர்வாகத்திலும் இலங்கை இராணுவம் தற்போது மூக்கை நுளைத்து வருகிறது. அரசியல்வாதிகள் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையைக் கூட விட்டுவைக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் தற்போது சுதந்திரமாக வாழ்வதாகவும், அங்கே இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும், பலரால் பொய்பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இச் சம்பவமானது யாழில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் அடக்குமுறைகளைப் பறைசாற்றி நிக்கிறது.

No comments:

Post a Comment