மே 27,2011 : இலங்கயின் மனித உரிமை நிலைமை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையை தெளிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 17 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகத் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பில் விளக்கமளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற பகுதிகளை மீளக்கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களின் தேர்ச்சி தொடர்பாக இலங்கை பிரதிநிதிகள் மனித உரிமைப் பேரவையை தெளிவுபடுத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இராஜதந்திர மட்டத்திலான அதிகாரிகள் குழுவொன்று பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மனித உரிமைப் பேரவையின் 17 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 17 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment