வன்னியில் சிங்கள ராணுவத்தினரால் நாற்புரங்களிலிருந்தும் மக்கள் குடியிருப்புக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த கொலைவெறி தாக்குதல்களையடுத்து தமது உயிர்களை காப்பாற்றிக்கொள்வதற்காக ராணுவத்தினரிடம் சரணடைந்த அப்பாவி பொதுமக்களை ராணுவத்தினர் விசாரணையின் பின் சுட்டுக்கொன்றமைக்கான அதாரம் உயர்வுக்கு கிடைத்துள்ளது. முதியவர்கள்,குழந்தைகள் என்று ஒரு குறுகிய தொகை அப்பாவி தமிழ் மக்கள் விசுவமடுவை அண்டிய பகுதியில் 2009.எப்ரல் மாதமளவில் நிலைகொண்டிருந்த ராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.
சரணடைந்த இவர்களை ராணுவத்தினர் புலிகள் அப்போது நிலைகொண்டிருந்த பகுதிகள் தொடர்பாகவும் புலிகளின் முக்கிய அணிகள் எங்கு உள்ளார்கள் என்பது தொடர்பாகவும் மற்றும் தளபதிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எங்கு உள்ளார்கள் என்பது தொடர்பாகவும் கடுமையாக விசாரணை செய்த பின் குறிப்பிட்ட ஆப்பாவி தமிழர்களை ராணுவத்தினர் படுகொலை செய்துள்ளனர்.
நாம் இங்கு இணைத்துள்ள படத்தில் உள்ளவரை இன வெறி பிடித்த இலங்கை ராணுவத்தினர் சித்திரவதை செய்தபின் கழுத்தில் சுட்டு கொலை செய்துள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக படத்தில் காணக்கூடியதாகவுள்ளது.

எமது அன்பிற்குரிய புலம்பெயர் மக்களே எதிர்வரும் மே 18 ஆம் திகதி அன்று இங்கு கனடா உட்பட தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெறவுள்ள போர் குற்ற நாள் கண்டனப்பேரணிகளில் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மக்களுக்கு நீதி கோரியும் போர் குற்றத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை ராணுவத்தினரையும் மகிந்த அரசையும் சர்வதேச நீதிமன்ற கூண்டில் ஏற்றுவதோடு உலக சட்டதிட்டங்களின் பிரகாரம் தன் இன மக்களையே குண்டு போட்டு கொலைசெய்த நாட்டுடன் கொல்லப்பட்ட இன மக்கள் இணைந்து வாழமுடியாது என்பதோடு பாதிக்கப்பட்ட இன மக்கள் தனிநாடு அமைத்து பிரிந்து செல்லும் அதிகாரத்தை கொண்டுள்ளதாக அக்கிய நாடுகள் சபையே ஏற்றுக்கொண்டுள்ளது.
எனவே தன் நாட்டு மக்களான தமிழ் மக்களை போர் விதி முறைகளை மீறி நச்சுவாயு குண்டுகள் போட்டும் கொத்துக்குண்டுகள் பொட்டும் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இன அழிப்பு செய்த இலங்கை அரசுடன் சேர்ந்து வாழ முடியாது என்ற கோரிக்கையை திடமாக முன்வைத்து தமிழர்களாகிய நாம் தமிழீழ தனி நாட்டை அமைத்து இலங்கைத்தீவிலிருந்து பிரிந்து செல்லும் உரிமையை ஜ.நா ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று மே 18-டை முன்னிறுத்தி உலகமெங்கும் நடைபெற உள்ள போர் குற்ற நாளில் அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொண்டு ஓங்கி குரல் கொடுக்குமாறு உயர்வு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறது.
உயர்வு இணையத்தில் தொடர்ந்தும் சிங்கள இனவாத படைகளால் மேற்கொள்ளப்பட்டிருந்த போர் குற்ற ஆதாரங்களை வெளிக்கொண்டுவருவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
2ஆம் இணைப்பு
குறிப்பிட்ட செய்தியை நாம் வெளியிட்டதன் பின் இது தொடர்பான மேலதிக தகவல்கள் சில எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.இந்த சம்பவம் விசுவமடுப்பகுதியில் 2009 ஆண்டு சில மக்கள் ராணுவத்தினரிடம் சென்றவேளை அந்த மக்களுடன் சென்ற ஒரு கரும்புலி போராளியே தன்னை ராணுவத்தினர் இனம்கண்டு கொண்டதனால் குண்டை வெடிக்கவைத்ததாகவும் அதில் பல மக்கள் கொல்லப்பட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் மகிந்தவின் சகோதரருமாகிய கோத்தபாய ராஜபக்ஷவின் கிழ் இயங்கும் டெபென்ஷ் இணையம் செய்தி வெளியிட்டு ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த அப்பாவி மக்களை தாமே படுகொலை செய்துவிட்டு அதை புலிகள் மீது சுமத்தி புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலிலேயே இந்த மக்கள் கொல்லப்பட்டதாக நிழற்படங்களுடன் செய்தி வெளியிட்டு புலிகளை ஒரு வன்முறைவாதிகளாக உலக அரங்கில் காட்ட இலங்கையின் பாதுகாப்பு மையம் முனைந்திருந்தது.
இதனையடுத்தே புலிகளின் பகுதிகளிலிருந்து ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் செல்லும் மக்களை புலிகள் சுடுவதாக ஒரு கதையை இலங்கை அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டு, அது தற்போது ஜ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் புலிகளுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டாக பதிவாகியுள்ளமை வெளிச்சம்.
சரணடைவதற்காகவோ அல்லது மக்களுடன் மக்களாக ராணுவ கட்டுப்பாட்டுக்குள் செல்வதாக இருந்தால் ஒரு கரும்புலி போராளி கரும்புலி உபகரணங்களோடும் வெடிபொருட்களோடுமா செல்வார்?அதிலும் வன்னியில் நாற்புரங்களிலும் கடும் சமர் நடந்துகொண்டிருக்கும் பொழுது ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பொதுமக்களை கடுமையாக உடல் சோதனைகளுக்கு உற்படுத்தியிருந்தமை அதிலும் ஆண்களை உள்ளாடைகளை தவிர உடலில் உடுத்தியிருந்த அனைத்து உடுப்புக்களையும் அகற்றியே தமது கட்டுப்பாட்டுக்குள் வருமாறு ராணுவத்தினர் மக்களிடம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் ஒரு கரும்புலி போராளி வெடி குண்டுகளுடன் ராணுவக்கட்டுப்பாட்டுக்குள் மக்களுடன் சென்றார்.அதை இனம் கண்டுகொண்ட போதே கரும்புலி போராளி குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்த போதே குறிப்பிட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று இலங்கை அரசு முன்பு செய்திவெளியிட்டிருந்தமையை வைத்து பார்க்கும் போது இலங்கை அரசே திட்டமிட்டு தம்மிடம் வந்த அந்த மக்களை கொலை செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
அத்தோடு நாம் வெளியிட்டுள்ள படத்தில் உள்ள நபர் குண்டுவெடித்து இறந்ததற்கான அறிகுறி 1% வீதம் கூட தென்படவில்லை என்பதோடு கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான அறிகுறியே தென்படுகிறது என்பது இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதி செய்யப்படுகிறது.

No comments:
Post a Comment