Wednesday, May 18, 2011

தமிழ் பெண்களை கற்பழித்த இராணுவம், ஐ.நா அறிக்கையில் சுட்டிக்காட்டு!

இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அகதிக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் அரச படையினரால் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



இவ்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் இலங்கை நிலைமைகள் தொடர்பாக முக்கியமாக தெரிவிக்கப்பட்டு இருப்பவை வருமாறு:



”இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களில் அகதிக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்கள் அரச படையினரால் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டு இருக்கின்றனர்.



சிவில் உடையில் இரவு நேரங்களில் ஊர்ப் பகுதிகளுக்கு வருகின்ற படையினர் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு நெருக்குவாரங்கள் கொடுத்து இருக்கின்றனர்.



கருணா குழுவினரால் 2006 ஆம் ஆண்டு முதலான காலப் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வைத்து ஏராளமான சிறுவர்கள் வகைதொகை இன்றி கடத்தப்பட்டு ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்டனர்.







இனியபாரதி இக்கடத்தல் வேலைகளை முன்னின்று மேற்கொண்டு இருக்கின்றார். ஆயுதக் குழுக்களில் சேர்க்கப்பட்ட பின்னர் காணாமல் போன சிறுவர்கள் குறித்து எத்தகவலும் இன்னும் இல்லை.



ஆனால் சிறுவர்களை ஆயுதக் குழுக்களில் சேர்த்துக் கொள்கின்றமை 2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கையில் முடிவுக்கு வந்து உள்ளது.”

No comments:

Post a Comment