புலிகள் உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூடு கண்டுபிடிப்பு !
கிளிநொச்சி மாவட்டத்தில் கண்ணிவெடி அகற்றுவதில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வியாழனன்று விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரது எலும்புக்கூட்டைக் கண்டு பிடித்துள்ளனர். முதலில் மண்டையோட்டைக் கண்ட இராணுவத்தினர் பொலிசாருக்குக் கொடுத்த தகவலையடுத்து. கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் அந்த இடத்தைத் தோண்டியபோது மனித எலும்புக்கூட்டையும், விடுதலைப்புலிகள் அணியும் அடையாள இலக்கத் தகடு, சீருடை, வெடிக்காத கைக்குண்டு, ரவைக்கூடு போன்ற பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சந்தர்ப்பத்தின்போது யாழ் மாவட்ட சட்ட வைத்திய நிபுணரும் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தார். கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ.சிவகுமாரின் உத்தரவுக்கமைய இறந்தவர் ஆணா பெண்ணா அவருக்கு எத்தனை வயதிருக்கும், எப்படி இறந்தார் என்பதைக் கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனைக்காக எலும்புக்கூடு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Send To Friend |
செய்தியை வாசித்தோர்: 5493
No comments:
Post a Comment