Saturday, May 28, 2011

ஜேர்மனியின் பொருளியல் செனற்றராக ஈழத்தமிழர்


யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த இயன் கிருகரன் (72) என்பவர் ஜேர்மனியின் ஹம்பேர்க் பகுதியின் பொருளியல் செனற்றராக நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தின் பருத்தித்துறையில் 1939 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரித்தானியாவில் தனது கல்வியை நிறைவு செய்தபின்னர் 1970 களில் ஜேர்மனிக்கு சென்றிருந்தார். அங்கு கொள்கலன்களை வாடகைக்குவிடும் உலகின் மிகப்பெரும் நிறுவனத்தில் பணியாற்றிய கரன் பின்னர் தனது சொந்த நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார்.

அவரின் நிறுவனத்தின் தற்போதைய முதலீட்டுத் தொகை 400 மில்லியன் டொலர்களாகும். தற்போது அமைச்சர் நிலைக்கு உயாந்துள்ள கரன் வசிக்கும் ஜேர்மன் நாட்டில் 60,000 இற்கு மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் வசிக்கின்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment