இன்றைய நாள் எமது நெஞ்சமெல்லாம் சோகத்தால் உருகி தாங்கமுடியாத இழப்புக்களால் நிரப்பப்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மௌனிக்கப்பட்ட எமது ஆயுத போராட்டத்தையும் அதற்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய மனித தியாகத்தையும் நினைவு கூரும் நாளாகும்.
அந்த அவலக்குரல்களில் அவர்களின் அர்ப்பணிப்புக்களில் குருதிகொட்டும் நினைவுகளில் எமது இனம் உப்புக்காற்றில் முள்ளிவாய்க்காலில் கடற்கரை சாலையில் பதிந்துகொண்ட மரண ஓலத்தை மனதில் நிறுத்தி மௌனமாக பிரார்த்திக்கும் நினைவுக்குரிய நாளாகும்.
வரலாற்று கால சக்கரத்தில் எமது தேச விடுதலைக்காக சொல்லொண்ணா துயரத்தில் தடைகளை தாண்டி நகர்த்தி அதற்காக நாம் கொடுத்த விலைகளும் நாம் சுமந்த சுமைகளும் வர்ணிக்கக் கூடியதல்ல..
எல்லா சுமைகளுக்கும் இழப்புகளுக்கும் மகுடம் சேர்த்தாற்போல் அமைந்தது இந்த நான்காம் ஈழப்போர் அதன் உச்சமாக உலகமயமாக்கல் வடிவமாற்றத்தின் உரமாக ஆயிரம் ஆயிரம் போராளிகளும் மக்களும் உலக நியதிகளுக்கு புறம்பாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயராக மனித படுகொலையாக உருவெடுத்ததே முள்ளிவாய்க்கால் இன அழிப்பாகும்.
எமது இனத்தின் விடிவுக்காகவும் அதன் உணர்வுக்காகவும் ஆயுதப்போராட்டத்தின் இறுதிநாள்வரை தமிழர் தரப்பில் ஆயுதங்கள் மௌனிக்கும்வரை எமது மக்களும் போராளிகளும் செய்த தியாகங்களையும் சாதனைகளையும் இந்நாளில் உணர்வு பூர்வமாக நினைவுகூறுவோம்.
அவர்களின் ஆகுதியில் ஒரு சத்தியத்தை செய்து கொள்வோம். உலக மாற்றத்தின் பயனையும் அரசியல் மாற்றத்தின் தேவையையும் உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் எமது அடிமனதிலுள்ள கசப்புக்கள் காழ்ப்புணர்வுகள் ஆகியவற்றை தூக்கி எறிந்து இன்னும் முன்னோக்கி சிங்கள இன ஆதிக்க பிடியில் இருந்து விடுபட்டு சுதந்திர வாழ்வை அமைப்பதற்காக நிதானமான சாத்தியமான உலக அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப இராஜதந்திர போக்கை கடப்பிடித்து உறுதியுடனும் உணர்வுடனும் எமது விடுதலைக்காக ஒவ்வொரு உறவும் கரம்கோர்த்து உழைப்போம் என இந்த நாளில் உறுதி எடுப்போம்.
அன்புக்குரிய தமிழ் பேசும் மக்களே! எதிர்பாராத விதமாக முடிந்த எமது ஆயுதப்போராட்டத்தின் களங்களில் எமது தலைவர் அவர்களும் போராட்டத்தின் உந்து சக்தியாக இருந்த எமது தளபதிகளும் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்று விடை காண முடியாத கேள்விகளுடன் கடந்த இரண்டு வருடங்களாக எமது உறவுகள் அலைவது நிஜம்.
பிரபாகரன் என்பது ஓர் இலட்சியப்பற்றுக்கொண்ட அணைக்க முடியாத தீ அது உங்கள் ஒவ்வொருவரினதும் உள்ளத்திலும் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் அந்தத் தீ அணையாத படி வாழ்வதே இன்றைய தேவையாகும்இ இந்தத் தீயில் இருந்து அதன் அற்புத சக்தியில் புதிய பதிய வரலாறுகள் படைக்கப்படும் என்பதே உண்மையாகும்.
அவரை பொறுத்தவரையில் யசீர்அறபாத் பாலஸ்தீனத்துக்கு பெற்றுக்கொடுத்ததைப்போல் அரைகுறை தீர்வுத் திட்டத்தை எமது இனத்தின் மீது திணிப்பதை விடுத்து மண்டியிடாமல் தனித்துவத்தை காத்ததே தலைமையின் தீர்க்க தரிசனம் ஆகும்.
எம்மிடம் சகல துறைகளையும் உள்ளடக்கிய அரச கட்டமைப்பு இருந்தது எமது நிலப்பரப்பில் எழுபது வீதமான பரப்பை நாம் ஆண்டோம் முப்படைகளும் நாட்திசைகளும் இருந்தன ஆனால் சர்வதேச அங்கீகாரம் என்பதே காலத்தின் கட்டாய தேவையாக இருந்தது.
ஈழப்போர் மூன்றில் ஜெயசிக்குறு நடவடிக்கையை தவிடு பொடியாக்கி 270 வருடங்கள் அந்நியப்பிடியில் இருந்த ஆனையிறவு கூட்டுப்படைத்தளத்தை தகர்த்தது வடக்கே முகமாலைவரை நகாந்து அதை சிங்கள ராணுவத்தின் புதைகுழியாக்கி கட்டுநாயக்கா கதவுகளைத் திறந்து பொருளாதார இருப்பை நெருப்பில் கருக்கி நாம் சிங்கள இராணுவ இயந்திரத்தை வென்று அதன் இயக்கிகளான இன வெறியர்களை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தையை தொடக்கினோம் அதுவே சிங்களவருடனான யுத்தத்தில் தமிழ் தரப்பு மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி வெற்றியை வரலாற்றில் பதித்தது என்பது உண்மையாகும்.
இது மகாவம்சத்தைப்போல் புனையப்படாத வரலாறு ஆகும். அதன் பின்னர் உலக பந்தில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளால் தமிழர் விடுதலைப்போராட்டமும் அதனுள் சிறைபிடிக்கப்பட்டு பயங்கரவாத சாயம் பூசப்பட்டு உலகநாடுகளின் ஒத்தாசைகளுடன் அவர்களின் வழிநடத்தலுடனும் முற்றிலும் சர்வதேசத்துக்கு எதிரான இராணுவ இராஜதந்திரப்போராக உருவெடுத்ததே நான்காம் கட்ட ஈழப்போர் ஆகும்.
சமாதனா காலத்தில் அதற்கான பொறிமுறைகள் வகுக்கப்பட்டதே தவிர எவரும் இதய சுத்தியுடனோ எமது பிரதேச அபிவிருத்தியிலோ விடுதலைப்போராட்டத்தின் வளாச்சியிலோ விருப்பம் கொள்ளாது காலத்தை இழுத்தடித்து நிரந்தர தீர்வு இல்லாமல் நிம்மதியான வாழ்வு இல்லாமல் ஓர் அரசியல் சூனிய வெளியில் எமது பலத்தை குறைப்பதிலேயே குறியாக இருந்தது என்பது இன்று வெளிச்சம்.
இவ்வாறாக ஓர் இக்கட்டான நிலைமையில்தான் எதிரிக்கு வரலாற்றை நினைத்துப்பார்க்க முடியாக பேரிழப்பைக்கொடுத்து உலகம் எதிர்பார்க்காத இராஜதந்திர வியுகத்தை வகுத்து இறுதி ஓர் அங்குல மண்ணை எதிரி ஆக்கிரமிக்கும் வரை உணர்வுள்ள உண்மையான போராளிகள் களமாடி வீழ்ந்ததும் மக்கள் துயராற்றில் மூழ்கியும் காவியமாகி இராணுவ இயந்திரத்துக்கு தகுந்த பதிலடி கொடுத்து அதே வேளை இராஜ தந்திர போரில் முழுமையாக தம்மை ஈடுபடுத்தி உலகமும் எதிரியும் எதிர்பார்த்தது போல் பரந்தடி போர்முறைக்கு மாற்றம் பெற்ற அதே வேளை தமிழ் மக்கள மீதான கொலை வெறித்தாக்குதல் நடத்தி அதனால் எம்மை கோபமூட்டி சிங்கள மக்கள் மீதான தாக்குதலை ஊக்கப்படுத்தி பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி வரலாற்றை மாற்றியமைக்க சிங்களம் திட்டம் போட்டது.
ஆனால் போராளிகளும் தலைமையும் மிக உறுதியான ஒழுக்கமான உறுறதிகளை எடுத்துக்கொண்டனர். அதனாலேயே நான்காம் கட்ட ர்ழப்போரில் தற்கொலைத் தாக்குதல் உத்திகள் குறைக்கப்பட்டது. புழிக்கு பழி வாங்கல் தாக்குதல்களும் நிறுத்தப்பட்டது.
நாம் பெரும் அழிவுகளை சந்தித்தபோதும் தென்பகுதி தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு பிற்காலத்தில் பெருமளவு வெடிபொருட்கள் ஆயுதத்தளபாடங்கள் எதிரியின் கையில் சிக்கின.
அதே நேரம் இவற்றை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள புலானாய்வாளர்கள் தங்களின் தயார்படுத்தல் மூலம் சில தாக்குதல்களை நடாத்தியும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகளில் ஊடுருவி மக்களையும் போராளிகளையும் பிரித்தாழும் தந்துரோபாயங்களை கையாண்டனர் ஆனால் மக்கள் அதனை உணர வெகு நாட்கள் செல்லவில்லை.
உள்ளே மக்களை கொடுமைப்படுத்தி நாடகம் அரங்கேற்றிய பலர் தடுப்பு முகாம்களிலும் இடம் பெயாந்தோர் இடைத்தங்கல் முகாம்களிலும் ஓமந்தை சோதனைச்சாவடியிலும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து போராளிகளை இனம்காணப்படுவதிலும் கொலை செய்யப்படுவதிலும் பெரும் பங்காற்றினார்கள்.
இன்றும் அவர்களில் பலர் எம் முன்னே சிறப்புடன் வாழ்வதிலும் தொடர்ந்து உள்ளுர் சர்வதேச தமிழ் மக்களின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களை மழுங்கடிப்பதிலும் சர்வதேச சமூகத்திடம் ஆதரவை குறைத்துக்கொள்வதற்காகவும் கடின புலனாய்வுப்பணியில் ஈடுபடுவதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பரப்புரையின் உச்ச கட்டமாக அரங்கேரியதுதான் விசுவமடு இடைத்தங்கல் முகாமில் நடந்த தற்கொலைத்தாக்குதல் ஆகும். யுத்தம் நடைபெறும் போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவ முன் அரங்கூடாக வரும் ஒவ்வொரு குடிமகனும் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட பின்னரே உள்நுழைய அனுமதிக்கப்பட்டு உள்வாங்கிய பின் இராணுவ சிறைப்பிடிப்பில்தான் ஓமந்தைவரை நகர்த்தப்பட்டார்கள் அவ்வாறு இருக்கும்போது அதன் கூட்டத்தில் ஒரு பெண் எவ்வாறு தற்கொலை அங்கியை உள்ளே நகர்த்தி தாக்குதல் நடத்தமுடியும்.
அதே நேரம் அவ்வெடிப்பு மிகத்தெளிவாக ஒளி ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் இராணுவத்தை விட பொதுமக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டது என்தை நாடகத்தின் உச்சம் ஆகும். அதே நேரம் அநுராதபுர எள்ளாளன் படை நடவடிக்கை வவுனியா விமானப்படைத்தளம் றேடார் தாக்குதல் என்பவற்றில் தற்கொலைத்தாக்குதல் வியூகம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பிரபஞ்ச மாற்றத்தில் ஒரு புள்ளியில் ஆரம்பிக்கப்பட்ட எமது விடுதலைப் போராட்ட ஆயுத வடிவம் ஒரு புள்ளியில் ஒரே நாளில் மௌனித்தபோது விடுதலை வீரர்கள் தங்களின் உயரிய ஒழுக்கப்பண்பை உலகுக்கு உணர்த்தி மீண்டும் ஒரு முறை உலகை வியப்பிலாத்தினார்கள். தலைவர் அவர்களின் தீர்க்கமான விடுதலைப்போர் முன்னகர்ந்தது தமிழ் மக்களின் தீர்க்க தரிசனமான முடிவுகளால்தான் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஈழத்தில் இருந்து இந்தியாவுக்குள்ளும் அங்கிருந்து திம்பு ஒஸ்லோ இறுதியாக ஜக்கிநாடுகள் சபை உலக நாடுகளில் இன்று வியாபித்து விருட்சமாக உள்ளது.
போரின் வடுக்களால் எமது இனம் ஒதுக்கப்பட்ட நிலையில் போராட்ட வடிவம் மாற்றம் பெற்று இன்று எமது இனத்தின் இருப்பு உறுதிப்படுத்தப்பட்டு கல்வி பொருளாதார இன விருத்தி என்பவற்றில் முன்சென்று 20 வருடங்களுக்கு மேலாக நாம் பறிகொடுத்த நிலங்களை யுத்தமின்றி இரத்தமின்றி கால்பதித்து எமது சந்ததி நிமிர தொடங்கிவிட்டது.
கொக்கிளாயும் குடும்பிமலையும் கஞ்சிகுடிச்சாறும் கீரிமலையும் குச்சவெளியும் திரியாயும் நாம் மெல்ல கால் பதித்துவிட்டோம்.
இது நாம் உணராத பெருமாற்றம் ஆனால் சிறிலங்கா அரசின் சிவில் நிர்வாக கட்டமைப்பு சீரின்மையும் அவர்கள் எம் இனத்தின் மீது பற்றின்மையும் புலனாய்வாளர்கள் அரசியல்வாதிகள் ஆகியோரின் சதித்திட்டங்களும் எமது மக்களை சமூதாய சீர் அழிவினுள் சிக்கவைத்து கொலைகளும் கொள்ளைகளும் பாலியில் வன்முறைகளும் சிறுவர் துபிரயோகங்களும் தகாத செயல்களும் இளம் சந்ததியை ஆக்கிரமிப்பதும் வேதனைக்குரியதே.
எனவே அன்புக்குரிய தமிழ் பேசும் மக்களே,
காலத்தின் தேவையையும் உண்மையான யதார்த்தத்தையும் உணர்ந்து எமது போராட்டத்தின் மாற்று வடிவத்தினுள் உள்நுழைந்து பொருளாதார கல்வி வளர்ச்சிக்கூடாக எம்மை நிலை நிறுத்தி நிமிர்ந்து இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டு மாவீரர் தின உரையில் தலைவர் குறிப்பிட்டது போல் புலம் பெயர் இளைய தலைமுறையிடம் போராட்டத்தின் உந்து சக்தியை கையளித்து அவர்கள் இன்று அதை இந்திய ஜரோப்பிய ஆபிரிக்க நாடுகளில் உலக மாற்றத்துக்கேற்ப புதிய உத்வேகத்துடன் இந்த பிரபஞ்சத்தில் நகர்த்திச் செல்வதற்கு ஒத்தாசை வழங்குவோம்.
அற்ப அரசில் தனி வாழ்வு சுகபோகங்களுக்காக எமது இனத்தை விற்காமலும் காட்டிக்கொடுக்காமலும் வரலாற்றில் நிகழ்ந்த துரோகங்களை எம் தாயின் கருப்பையில் உருவெடுத்த துரோகிகள் என்ற உடன் பிறப்புக்களுடன் உரிமையுடன் திருந்திக்கொள்ள ஒரு வேண்டுகோள் காலத்தின் தேவையையும் அதன் கடமைகளையும் உணாந்து நாம் வரலாற்றில் மீண்டும் தோன்றுவோம்.
“தாய் மண்ணின் குரல்”
(குறிப்பு - தாயக மண்ணிலிருந்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட தகவலே மேலே பிரசுரிக்கப்பட்டுள்ளது)
No comments:
Post a Comment