மதிமிகு ஜெயலலிதா ஜெயராம் அவர்கட்கு,
நம்பிக்கை தரும் தமிழகத்தின் வருகைக்கு வாழ்த்துக்கள்!
சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போர் ஒன்றை நடாத்தி முடித்து, தொடர்ந்தும் தமிழ் மக்களையும், மண்ணையும் எம் வாழ்வையும் சூiறாடிவரும் இந்தச் சூழலில் தாங்கள் தேர்தலில் ஈட்டிய அமோக வெற்றி எம் அனைவரின் மனங்களிலும் புதிய நம்பிக்கையை தோற்றுவித்திருக்கிறது.
குறிப்பாக, தாங்கள் வெற்றிபெற்ற நாளன்றே வேறெவரின் வேண்டுகோளும் இன்றி, தாங்களாகவே முன்வந்து ஈழத்தமிழர்களுக்காக ஆணித்தரமாகக் குரல் கொடுத்திருப்பதானது எம் அனைவருக்கும் தங்கள் தலைமையிலான தமிழகம் குறித்த புதிய ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
ஈழத் தமிழரின் அவலம் உலக அரங்கில் ஐ.நா.வின் கதவை இப்போது தான் தட்டியிருக்கிறது.
உலகெங்கும் பரந்து ஜனநாயக அரசியல் நீரோடட்த்தில் கலந்து வாழ்ந்தாலும், தமிழ்த் தேசத்தின் சொந்தக் குரல் உலக அரங்கில் அரசு ஒன்றின் ஊடாக உறுதியாக ஒலிக்கின்ற போதுதான் உலக மனச்சாட்சியின் கதவு முழுமையாகத் திறக்கப்படும்.
இந்த வகையில் தமிழக மக்களின் முதல்வராக மாத்திரமல்ல, முழு இந்தியாவுக்குமே தாங்கள் தலைமை தந்து, தென்னாசியப் பிராந்தியத்திலேயே அமைதியும் சமாதானமும் முன்னேற்றமும் செழிக்கச் செய்யும் பிரதம மந்திரியாகவேண்டும் என்பதே எமது ஆழ்மன விருப்பம்.
இந்திரா காந்தி அம்மையார் ஈழத்தமிழர் மீது காட்டிய அக்கறைக்குப் பின்னர், எமது மனங்களில் இருந்து என்றும் அகலாத தமிழக முதல்வர் மக்கள் திலகம் எம். ஜி. ஆர் அவர்கள் எம்மீது காட்டிய அர்த்தமுள்ள ஆதரவுக்குப் பின்னர், திடமான ஒரு சர்வதேசத் தலையீட்டையும் தீர்வையும் கொண்டு வரும் அர்த்தமுள்ள குரலாக தங்களின் குரல் ஒலித்திருப்பது எமக்கு மிகுந்த நம்பிக்கை தருகிறது.
இவ்வேளை, வெற்றுப் பேச்சு அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைத்து, புதிய நம்பிக்கையூட்டும் தங்கள் வெற்றிக்கு வழிகோலிய அனைத்து தமிழக உறவுகளின கரங்களையும் நாம் நம்பிக்கையோடு இறுகப் பற்றிக்கொள்கிறோம்.
இவ்வண்ணம்

நா.க.த.அ ஜனநாயகவாதிகள்
78 Carolbreen Sq, Scarborough, ON M1V 1H5.
CanadaTel: 001 (416)319 8782
email: tgte.democrats@googlemail.com
No comments:
Post a Comment