கொழும்பு, மே 15- இலங்கையில் நடைபெற்ற போரில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா மனிதாபிமான உதவிகளுக்கான கீழ்நிலைச் செயலர் பரோநெஸ் வாலெரி தெரிவித்த கருத்துக்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஐநா அதிகாரி தெரிவித்துள்ள கருத்து உறுதி செய்யப்படாத புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டது என்று இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.மேலும், ஐநா சபையின் கொள்கைகளை பாதுகாக்கும் ஒரு அதிகாரி போல பரோநெஸ் வாலெரி செயல்படவில்லை என்றும் இலங்கை குற்றம்சாட்டியுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக ஐநா சபைக்கு இலங்கை அரசு சார்பில் கடிதம் ஒன்றும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment