இந்த ஆவணப்படம் முற்றிலும பக்கச்சார்பானது என்றும், இதில் சிறிலங்கா மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வேக்கான சிறிலங்கா தூதுவர் றொட்னி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், இத்தகைய ஆவணப்படத்தை ஒளிபரப்புவது அதனைக் குழப்பத்துக்கு உள்ளாக்கும் என்றும் அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இதுபோன்ற காட்சிகள் அடங்கிய காணொலியை ஒளிபரப்புவதன் மூலம் ஒஸ்லோவில் உள்ள சிறிலங்கா தூதரகம் மட்டுமன்றி அதன் பணியாளர்களுக்கும் நோர்வேயில் வசிக்கும் சிறிலங்கர்கள் அனைவருக்குமே பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, சனல் 4 தயாரித்த இந்த ஆவணப்படத்துக்குப் போட்டியாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தயாரித்த “Lies Agreed Upon,” என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்புவது குறித்து கவனம் செலுத்துமாறும் என்ஆர்கே தொலைக்காட்சியிடம் சிறிலங்கா தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனினும் சிறிலங்கா துதரகத்தின் கடும் எதிர்ப்பை என்ஆர்கே தொலைக்காட்சி கண்டுகொள்ளவில்லை.
சிறிலங்கா அரசாங்கத்தின் எதிர்ப்புக்களை புறக்கணித்து சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை நேற்றுமுன்தினம் இரவு என்ஆர்கே தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
No comments:
Post a Comment