ஜெனீவாவில்
இலங்கைக்கு எதிராக எவ்வகையான தீர்மானங்களை முன்வைத்தாலும் அதனை
முறியடிப்போம். போர்க் குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி இலங்கைக்கும்,
சர்வதேசத்திற்கும் இடையில் நடைபெறுகின்ற போராட்டத்திற்கு ஜெனீவா மனித
உரிமைப் பேரவையில் நாளை பதில் கிடைத்துவிடும் என்று அரசாங்கம்
தெவித்துள்ளது.
இடம்பெயர்ந்த தமிழர்களும், சர்வதேச அரச
சார்பற்ற நிறுவனத்தினரும், மேற்குலக நாட்டவருமே இன்று இலங்கையின்
நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றனர்.
இவர்கள் மிக தீவிரமாக இலங்கைக்கு எதிரான
தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்கின்ற போதிலும் அதனை பெரும்பாலான
நாடுகளின் ஆதரவுகளைப் பெற்று முறியடிக்க தேவையான பொறிமுறையைக்
கையாண்டுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று புதன்கிழமை மகாவலி
கேந்திர நிலையத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில்:
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித
உரிமைகள் சாசனத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவர சர்வதேச
மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கனடா மற்றும் மேற்குலக நாடுகள்
உட்பட அரசசார்பற்ற நிறுவனங்கள் சர்வதேசத்தில் வாழும் புலி ஆதரவாளர்கள்
என்று பல்சார் கூட்டணி இன்று இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு ஆதாரங்களை
தயாத்து வருகின்றது.
இவர்களின் இலங்கைக்கு எதிரான பிரதான
ஆதாரமாக ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை கையாளப்பட்டு வருகின்றது. நாளை
வெள்ளிக்கிழமை 30ஆம் திகதியே இலங்கைக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்திற்கும்
இறுதி நாளாகும்.
ஏனென்றால் மனித உமை பேரவையில் தோல்வியடைந்த எந்தவொரு தீர்மானத்தையும் பாதுகாப்புச் சபைக்கோ, பொதுச்சபைக்கோ கொண்டுச் செல்ல முடியாது.
இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவா மனித உமை
பேரவையில் ஏராளமான நாடுகள் உள்ளன. எனவே குறிப்பிட்ட சிலரின் செயற்பாடுகள்
இலங்கைக்கு சவாலாக அமையாது. எவ்வாறாயினும் நாட்டிற்கு எதிராக முன்
வைக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் நாம் முறியடிப்போம் என்றார்.
No comments:
Post a Comment