Friday, October 14, 2011

ஜரோப்பிய பாராளுமன்றத்தை கண்கலங்கவைத்த சனெல்.4 காணொளி

 
சனல்-4 இன் ஆவணப்படம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்று Alliance of Liberals and Democrats of Europe கட்சியின் தலைமையில் S&D,Green/EFF,EFA,GUE/HGL ஆகிய கட்சிகளின் துணையுடன் Amnesty International,International Crisis Group, Humanrights watch,


ஆகிய அரசசார்பற்ற மனிதநேய அமைப்புகளின் ஆதரவுடன் 200க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கு கொள்ள சிறி லங்காவில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான 'சிறி லங்காவின் கொளைகலங்கள்' கொலைகளின் சாட்சிகள் இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்வை ஆரம்பித்துவைத்த பாராளுமன்ற உறுப்பினர் திருமதி Ana Gomes உண்மைகள் நிலைநாட்டப்படவேண்டும் என்ற முக்கியதுவத்தை விளக்கியதோடு Channel 4 தொலைக்காட்சிக்காக இந்த சாட்சியங்களுக்கான ஆவணப்படத்தை தயாரித்தவர் என்ற அடிப்படையில் அதன் தயாரிப்பாளர் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்ட விபரத்தை விளக்கினார்.

இந்த ஆவணப்படம் திரையிடப்பட்ட போதும் அதன் பின்பும் சபையில் மயான அமைதி, அதன் பின் பேசிய அவை தலைவர் திருமதி அனா ஒமெழ் கண்கலங்கிய நிலையில் பேசுவதற்கு வார்த்தைகளை தேடிக்கொண்டு இருந்தார், இந்த அவையில் பங்குபற்றிய அனைவரின் வார்த்தைகளிலும் அதிர்ச்சி, பெண்களின் உடல்களை தூக்கி எறிந்து காலால் உதைக்கும் போது கோபம் அவர்கள் முகத்தில் தெரிந்தது. சிலர் இந்த நுற்றாண்டில் இப்படியும் ஒரு காட்டு மிராண்டி தனம் உண்டா என்று கேள்வியை எழுப்பினார்கள்.

அதே நேரத்தில் இந்த நிகழ்வில் பங்குபற்றிய சிறி லங்காவின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க்ஹா அந்த ஆவணப்படத்தை மறுதலித்தது மட்டுமல்லாமல், இது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒளிபரப்பப்படுவது அநீதி என்றும் , வழமை போல் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதிகளுக்கு இடம் அளிப்பதாக புலம்பினார், அவரின் கூற்றுக்கு வக்காளத்து வழங்குவது போல் பிரித்தானிய கோன்செர்வடிவே கட்சியை சேர்ந்த Van Hoden சிறி லங்கா அரசுக்கு பல்லவி பாடினார்.

அதே நேரத்தில் இந்த நிகழ்வில் பங்கு பற்றிய திருமதி Ana Gomes, திருமதி Laima Andrikienne , திரு Raul Romevai, திருPaul Murphy, திருமதி Marietje Schaake ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறி லங்கா அரசின் வாதத்தை கண்டித்தது மட்டுமல்லாமல் அவர்களின் செயல்கள் உலக சட்டங்களை மதிக்கவில்லை என்றும் கூறினார்கள், திரு Paul Murpy சிறி லங்கா அரசே ஒரு பயங்கரவாத அரசு என்றும் சிறி லங்கா அரசு தொடர்ந்தும் பல வழிகளிலும் தமது அடக்கு முறைகளை தொடர்வதாகவும், சர்வதேசம் இதில் தலை இடவேண்டும் என்றும் வலியுறித்தினார்.

இந்த நிகழ்வில் பங்குபற்றிய மனித நேய அமைப்புகள் போர் முடிந்து இரண்டு வருடங்களுக்கு பின்பும் சிறி லங்கா அரசு எந்த வகையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை என்றும், தொடர்ந்து வேற்று வழிகளில் சிறி லங்கா தமிழ் மக்களை அடக்கி வாழ்வதாகவும், தமிழர்களை அவர்களின் நிலங்களில் மீள்குடியேற்றம் செய்ய தவறுவதாகவும், சிறி லங்காவில் ஒரு சுயாதின கமிஷனை உருவாக்கிவிட்டு காலம் கடத்துவதாகவும் ஐரோப்பிய பாராளுமன்றம் அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டு இருப்பதை விட்டு விட்டு சிறி லங்கா அரசு மேல் சிறி லங்காவில் நடைபெற்ற போர் குற்றம், மனித நேயத்திற்கு எதிரான குற்றத்திற்கு விடை தேடவேண்டும் என்றும் கூறினர். அமேனச்டி இன்டர்நேஷனல் பேச்சாளர் சிறி லங்காவில் இந்த இனப்பிரச்சனைக்கான மூல காரணங்களையும் அராய்ந்து தமிழ் மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறினார்.

சிறி லங்கா தூதுவர் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த போராட்டத்தை ஆயுத போராட்ட காலத்தை மட்டும் முக்கியமாக குறிப்பிட்டு கூறுகையில் இதை பயங்கரவாதம் என்ற பார்வையில் கூற்றுகளை முக்கியமாக வைத்த பொழுது தமிழர்களின் கேள்விகள், நீங்கள் என் இந்த 30வருடத்தை மாத்திரம் முக்கியமாக குறிப்பிடுகிறீர்கள் என்று கேட்ட போது, சிங்கள மக்கள் சுதந்திரிம் பெற முன்பு புறக்கணிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று கூற்றை முன்வைத்தார், இதை ஆழமாக நாம் பார்த்தல், சுதந்திரத்திட்கு பின் சிறி லங்கா அரசு சிங்கள பேரினவாத கொள்கையுடன் செயல் படுவதாக ஆதார பூர்வமாக காட்டுகிறது. சிறி லங்காவில் நடைபெறுவது ஒரு திட்டமிடப்பட்ட இன அழிப்பு என்பதையே இது வலியுறுத்துகிறது.


No comments:

Post a Comment