இலங்கையில்
படையினர் மேற்கொண்ட போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை
வலியுறுத்திவரும் சர்வதேச மன்னிப்புச் சபை, போர்க் குற்ற விசாரணை நடத்த
ஆதரவு தருமாறு வெள்ளை மாளிகையில் மனுவொன்றைக் கையளித்துள்ளது.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ
இணையத்தளம் மூலமாக வெள்ளை மாளிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில்,
எதிர்வரும் 29-ம் திகதிக்கு முன்னதாக போர்க்குற்ற விசாரணை தேவை என்ற
கோரிக்கை அடங்கிய மனுவை,ஐயாயிரம் பேரின் கையொப்பத்துடன் அனுப்பி வைத்தால்
அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தது.
இது
இவ்வாறிருக்க இவ்வறிவித்தல் வெளியான கையோடு இணையத்தளம் மூலமாக சுமார்
மூவாயிரம் பேர் தங்கள் சம்மதத்தை தெரிவித்து தகவல் அனுப்பியுளளனர்.
இதேவேளை இது இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கான அமெரிக்க ஜனாதிபதி
ஒபாமாவின் நிர்வாகத்தின் முதற்கட்ட நடவடிக்கை என அந்த அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment