Wednesday, October 12, 2011

தமிழர்களுக்கு நீதி வழங்குவதாக மூனிடம் வாக்குறுதி அளித்தார் மஹிந்தர்!


தமிழ்மக்களின் மனிதஉரிமைகளை உறுதிப்படுத்தி, அதனைப் பாதுகாக்க ஊக்குவிப்பதாகவும், நீதியை நிலைநாட்டுவதாகவும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

நோர்வேஜிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


ஐ.நா நிபுணர்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நிபுணர்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் நிபுணர்குழுவின் அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கும், மனிதஉரிமைகள் ஆணையாளருக்கும் அனுப்புவதற்கு தான் முடிவு செய்ததாகவும், அவர்கள் அதனை மீளாய்வு செய்து வருவதாகவும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்கு வந்த சிறிலங்கா அதிபருடன் இந்த விவகாரம் குறித்து தாம் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அப்போது அவர், தமிழ் மக்களின் மனிதஉரிமைகளை உறுதிப்படுத்தி பாதுகாக்கவும், நீதியை நிலை நாட்டவும் உள்ளக ரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment