Wednesday, October 12, 2011

சவேந்திராவிற்கு இராஜதந்திர விடுபாட்டுரிமை கிடையாது - அமெரிக்க சட்டவாளர்கள்


இராஜதந்திரிகளுக்கான விடுபாட்டுரிமை சவேந்திர சில்வாவிற்குக் கிடையாது என்று அமெரிக்க சட்டவாளர்கள் திரும்பவும் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சவேந்திர சில்வா தொடர்பில் அவரது வழக்கில் இருந்து இராஜதந்திரிகளுக்கான சலுகைகள் பாதுகாக்கும் என கூறியதாக சிறிலங்கா அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

இது தொடர்பில் அமெரிக்க சட்டவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொதுவான உரிமை பற்றியே நீதிமன்றத்திற்கு அறிவித்ததே ஒழிய அந்த இராஜதந்திரிகளுக்கான உரிமைகள் சவேந்திர சில்வாவை பாதுகாக்கும் என கூறவில்லை மாறாக அப்படி கூறவும் அவர்களால் முடியாது. அது தொடர்பில் நீதிமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும்.
ஆனால் நீதிமன்றங்கள் சவேந்திர சில்வா வழக்கு போன்றதொரு வழக்கை முன்னர் நடத்தியுள்ளது. அந்த வழக்கில் இராஜதந்திரிகளுக்கான சலுகைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட வெளி நாட்டு பிரஜை ஒருவருக்கு பொருந்தாது என தீர்ப்பளித்துள்ளது.
மேலும் வெளி நாட்டு இராஜதந்திரிகளுக்கான சலுகைகளானது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒரு வெளி நாட்டு அரச அதிகாரிக்கு பொருந்தாது என அந்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆகவே சவேந்திர சில்வாவின் வழக்கிற்கும் இது பொருந்தும என்றும் அமெரிக்க சட்டவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment