Saturday, October 22, 2011

புலிச் சந்தேக நபர்களுக்கு நெதர்லாந்தில் சிறைத் தண்டனைத் தீர்ப்பு!

நெதர்லாந்தில் டென்ஹாக் நகரத்தில் விடுதலைப்புலிச் சந்தேகநபர்களாக கூறப்பட்ட ஐந்து மனிதநேயப் பணியாளர்களுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கபட்டது
அத் தீர்ப்பின்போது ஐவருக்கும் கீழ் குறிப்பிடவாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
 அதன்படி செல்லையா என்பவருக்கு ஆறு வருடங்கள், அதாவது இன்னும் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களும்,
இராமலிங்கம் என்பவருக்கு ஐந்து வருடங்கள் அதாவது இன்னும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களும்,

இளவரசன் என்பவருக்கு மூன்று வருடங்கள் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களும்,
லிங்கம் என்பவருக்கு இரண்டு வருடங்கள் அதாவது இன்னும் கிட்டத்தட்ட ஒரு வருடங்களும்,
மனோ என்பவருக்கு இரண்டரை வருடங்கள் அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களும் தீர்க்கப்பட்டது,
மேலும் தீர்ப்பில் கூறப்பட்டதாவது:
இவர்கள் தீவிரவாத அமைப்பு இல்லை எனவும் நெதர்லாந்தில் தமிழர் விளையாட்டுப் போட்டிகள் பாடசாலைகள் மற்றும் தேசிய நினைவு எழுச்சி நாள் ஆகிய அனைத்து நிகழ்வுகளும் தடையின்றி நடத்தலாம் எனவும் கூறப்பட்டது,
இது சம்பந்தமாக இவர்களின் இந்த தண்டனையையும் நீக்குமாறு கோரி இவர்களின் சட்டத்தரணிகள் மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment