Saturday, October 22, 2011

மகிந்தவின் வரவைத் தடுக்கக் கோரும் நியூசிலாந்து ஈழத் தமிழர் சம்மேளனம்


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒக்லேன்ட் நகருக்கு வருதைத் தடுத்து நிறுத்துமாறு நியூசிலாந்து ஈழத் தமிழர் சம்மேளனம் அந் நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழர் நடவடிக்கை முன்னணியின் ஒரு அங்கமாகவே இக் கோரிக்கை மேற்படி சம்மேளனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.


ஒக்லேன்ட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரக்பி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. அங்கு ஜனாதிபதி மகிந்தவுக்கு இராபோசனம் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந் நிலையிலேயே இக் கோரிக்கையை நியூசிலாந்து அரசாங்கத்திடம் ஈழத் தமிழர் சம்மேளனம் விடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களத கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் வழியில் மகிந்த ராஜபக்ஷ  ஒக்லேன்ட்டில் தங்கிச் செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே இந் நடவடிக்கைகயைத் தடுத்து நிறுத்துமாறும் அவுஸ்திரேலிய நீதிமன்றில் யுத்தக் குற்றஞ்சுமத்தப்பட்ட இலங்கையின் தூதுவருக்கு எதிராக தமது ஆதரவை வழங்க வேண்டும் என்றும் மேற்படி சம்மேளனம் கோரியுள்ளது.

இது இவ்வாறிருக்க பொதுநலவாய நாடுகளில் இருந்து போர்க் குற்ற நாடான இலங்கையை நீக்க வேண்டும் என்றும், பொதுநலவாய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரை நியமிப்பதற்கு நியூசிலாந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள மேற்படி சம்மேளனம்,

தொடர்ந்தும் அவுஸ்திரேலியா போர்க் குற்றவாளிகளை இலங்கையின் தூதுவர்களாக ஏற்றுக் கொள்வதை நியூசிலாந்து அரசாங்கம் தடுப்பதற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவையும் தற்போது ரியர் அட்மிரல் திசர சமரசிங்கவையும் அவுஸ்திரேலியா இலங்கை தூதர்களாக ஏற்றுக்கொண்டமையை தமிழர் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment