அதாவது இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இப் பேச்சுக்களில் கலந்து கொள்வதற்காக கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நேற்று காலை 6 மணிக்க இலங்கையில் இருந்து புறப்பட்டு அமெரிக்க நேரம் பிற்பகல் 12.30 மணிக்கு வாசிங்டனைச் சென்றடைந்தனர்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு இன்று காலை 9.20 மணியளவில் சென்றடைந்த அவர்கள் நால்வரும் அதிகாரிகளால் வரவேற்கப்பட்டு சரியாக காலை 9.30 மணிக்கு பேச்சுவார்த்தைகளிற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழர்களின் ஜனநாயகத் தலைமையுடன் பேச்சுக்களை அமெரிக்கா மேற்கொள்வது குறித்து சிறீலங்கா இராஜதந்திர ரீதியில் கடும் கண்டனத்தை வெளியிட்ட போதும் அமெரிக்கா அதனை கருத்திற் கொள்ளாததோடு இலங்கைத் தமிழர்களிற்குரிய பிரச்சினைகளிற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை வலியுறுத்தம் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்காவிற்கு அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment