Monday, October 31, 2011

கனடா ரொரென்ரோவில் வெற்றிகரமாக நடைபெற்ற பொங்கு தமிழ்


கனடாவில் இயங்கி வரும் தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்கு தமிழ் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தின் “குயின்பார்க்” கட்டடத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த விசேட மேடையில் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்ட மேற்படி எழுச்சி நிகழ்வு ஒழுங்கான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


நமது தாயகத்தில் இலங்கை அரசின் இராணுவம் நமது மக்களை தொடர்ந்தும் வதைத்து வரும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும் கொடிதான போர்க்குற்றங்களை புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் சர்வதேசத்தினால் மிகவும் விரைவாகவும் அவசரமாகவும் எடுக்கப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தியும் மேற்படி பொங்குதமிழ் நிகழ்வு ஏற்பாடு செய்ய்பபட்டிருந்தது.
பல கலை நிகழ்ச்சிகள் உரைகள் ஆகியன இடம்பெற்றன. மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் குளிரின் கொடுமையை தாங்கிக் கொண்டு அந்த மைதானத்தில் கூடியிருந்தனர்.
கனடாவின் ஆங்கில ஊடகங்களில் முன்னனி வகிக்கும் சிபி-26 தொலைக்காட்சி மற்றும் 680 ஏஎம் வானொலி ஆகியன முறையே மேற்படி பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பியும் ஒலிபரப்பியும் ஆதரவு வழங்கின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





















  முகப்பு
Share

No comments:

Post a Comment