Sunday, October 02, 2011

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபை நம்பகத் தன்மையுடன் செயற்படவில்லை


பித்தானியாவின் நிழல் வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் அலெக்ஸாண்டர் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபை நம்பகத் தன்மையுடன் செயற்படவில்லை என்றார்.


2009 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஆணைக் குழு ஒன்று நிறுவப்பட வேண்டும்.

28 ம் திகதி இடம்பெற்ற தொழிற்கட்சிக்கான தமிழர்களின் மாநாட்டில் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச ஆணைக் குழுவின் பங்களிப்பில் தொழிற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இறுதிக்காலப்பகுதியில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச ரீதியாக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழு வின் விசாரணைகளில் தலையிடுவதாக அது அமையாது. எனினும் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு, தமது பணிகளை சர்வதேச ஆணைக்குழுவின் பங்களிப்புடன் மேற் கொள்ளவேண்டும் என்றே தாம் வலியுறுத்து வதாக டக்ளஸ் அலெக்சாண்டர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நாடு கடத்தப்பட்ட 50 பேரும் இலங்கையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்பதற்கான உறுதியை பித்தானிய அரசாங்கம் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் என்றும் தெவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ந்தும் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறு கின்றன. இடம்பெயர்ந்தோரை உரிய முறையில் இன்னும் இலங்கை அரசாங்கம் குடியமர்த்த வில்லை.

இந்தநிலையில் பித்தானிய அரசாங்கம் இலங்கையில் வன்முறைகள் மற்றும் மனித உமை மீறல்கள் தொடர்பில் நீதியான விசார ணைகள் மேற்கொள்ளப்படவும் சமாதானம் ஏற்படுத்தப்படவும் முயற்சிகளை மேற் கொள்ளவேண்டும் என்றும் டக்ளஸ் அலெக் சாண்டர் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment