"நாங்கள்
கியூபா, வெனிசுலா, மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசாங்கங்களுடன்
எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைப்பதற்கும், அவர்களுடன்
கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகவும் எமது பிரதிநிதிகளை அனுப்ப
விரும்புகின்றோம்"
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்ததாக தென்னமெரிக்கா நாடான கியுபாவை தளமாக கொண்ட 'HAVANA TIMES' இணையத்தள ஊடகத்தில் அவருடனான உரையாடலினை நடத்திய Ron Ridenour தனது அண்மைய கட்டுரையில் எழுதியுள்ளார்.
Ron Ridenour எழுதிய கட்டுரை வடிவிலான அந்த உரையாடலின் முழுவிபரமாவது,
"சிறிலங்காத் தீவிற்கு வெளியேயும் உள்ளேயும் வாழும் தமிழர்களாகிய நாம் சுதந்திரமான நாடொன்றையே இப்போதும் விரும்புகின்றோம். எமது மக்களுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்ட மிகக் கொடூரமான போர்க் குற்றங்கள் தற்போது நன்கறியப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சுதந்திரமான நாடொன்றை நாம் ஏன் அடைந்துகொள்ள வேண்டும் என்பதற்கான காரணம் தற்போது உலகம் பூராவும் பேசப்படுகின்றது" என நியூயோர்க்கின் மன்கற்றன் என்ற இடத்தில் என்னிடம் கருத்துரைத்த போது விசுவநாதன் உருத்திரகுமாரன் இவ்வாறு தெரிவித்தார்.
பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப்படமானது முதன்முதலில் கடந்த யூன் மாதத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் பின்னர் உலகம் பூராவும் காண்பிக்கப்பட்டமையானது தமிழர் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டதற்கான சாதகமான குறியீடாக உள்ளது.
உருத்திரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக உள்ள அதேவேளை, புலம்பெயர் சமூகத்தவர்களின் ஒரு முக்கிய செயற்பாட்டாளருமாவார்.
இவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் தென் மெதடிஸ்ற் பல்கலைகழகம் ஆகியவற்றில் சட்டத்துறையில் பட்டம் பெற்றுக் கொண்டார். பின்னர் கவார்ட் சட்டக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்ட உருத்திரகுமாரன் சுய நிர்ணய உரிமை தொடர்பாகவும் ஆக்கங்களை எழுதினார்.
சிறிலங்காவில் நீண்ட காலமாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது மே 2009ல் நிறைவுக்கு வந்ததன் பின்னர், தமிழ் மக்களின் இறையாண்மையை அனைத்துலக அரங்கில் பிரதிநிதித்துவம் செய்யவேண்டிய தேவைப்பாடு இருப்பதை கண்டுகொண்டார்.
சுயநிர்ணய உரிமையை நிலை நிறுத்தக் கூடிய தாயக பூமி ஒன்றை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப முயற்சியாக ஏனைய தமிழ் அறிவுஜீவிகள் மலேசியா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் சந்திப்புக்களை ஒழுங்குபடுத்திக் கொண்டனர்.
இவ்வாறு ஓரணியில் ஒன்று சேர்ந்துகொண்ட புலம்பெயர்ந்து வாழும் தமிழ்த் தலைவர்கள், 2009 மே மாதத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் கியூபா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் சிறிலங்காவிற்கு ஆதரவாக இருந்ததைக் கண்ணுற்ற போது மிகவும் குழப்பமடைந்தனர்.
அதாவது இந்நிலைப்பாடானது ஒட்டுமொத்தமாக கெரில்லாப் போராட்டத்திற்கு எதிராக மட்டுமன்றி தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரானதாக இருந்தமையால் புலம்பெயர் வாழ் தமிழ்த் தலைவர்கள் அதிர்ச்சியுற்றனர்.
"பிடல் மற்றும் Che ஆகியோரை தமிழர்கள் எப்போதும் தமக்கான வழிகாட்டிகளாக, கதாநாயகர்களாகவே பார்த்துவந்தனர்" என பிரதமர் தெரிவித்தார்.
"மே 2009ம் ஆண்டிலிருந்து கியூபா எடுத்த நிலைப்பாட்டால் எங்களுடைய மக்கள் மிகவும் அதிர்ச்சியுற்றுள்ளனர். இருப்பினும் உண்மையில் இது தொடர்பாடல் பற்றாக்குறையின் விளைவேயாகும். நாங்கள் கியூபா, வெனிசுலா, மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசாங்கங்களுடன் எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைப்பதற்கும், அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகவும் எமது பிரதிநிதிகளை அனுப்ப விரும்புகின்றோம்" எனவும் பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது எந்தவொரு அரசாங்கங்களுடனும் அல்லது அனைத்துலக சக்திகளுடனும் இறுக்கமான உறவைக் கொண்டிருக்கவில்லை எனவும் "நாங்கள் எந்த சக்திகளினதும் அனுதாபத்தைப் பெறவிரும்பவில்லை, ஆனால் எமது பிரச்சினைகளை விளங்கிக் கொண்டு எமக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றவர்களின் ஆதரவை நாம் ஏற்றுக்கொள்வோம்" எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக வழி சார்ந்த தீர்வை எட்டுவதற்கே நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது (TGTE) அழுத்தம் கொடுத்துவருகிறது.
இவ் அரசாங்கத்திற்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் 12 நாடுகளில் இடம்பெற்றன. இத்தேர்தல்கள் நடைபெற்ற சில இடங்களில் போட்டியிட்ட வேட்பாளரை எதிர்த்து வேறு வேட்பாளர்கள் போட்டியிடாமையால் அவ்வாறான இடங்களில் தேர்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை.
இத்தேர்தலில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் பங்களிப்புச் செய்தனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 56 பிரதிநிதிகள், உத்தியோகபூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சந்திப்பை மேற்கொள்வதற்காக மே 17-19, 2010 வரை பிலடெல்ப்பியா, பென்சில்வேனியாவில் ஒன்றுகூடினர்.
லண்டன் மற்றும் ஜெனீவா ஆகிய இடங்களைச் சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காணொலி கருத்துப்பகிர்வின் மூலம் இம்முதலாவது நாடாளுமன்ற அமர்வில் பங்கெடுத்துக் கொண்டனர்.
நவம்பர் 03 அன்று TGTE ஆனது தனது முதலாவது அமைச்சரவை தொடர்பாக அறிவித்துக்கொண்டது. இதில் 10 அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சரவையில் ஐவர் பெண்களாவார்.
'நாடுகடந்த அரசாங்கம்' என்ற விதத்தில் TGTE ஆனது எந்தவொரு குழப்பத்திற்கும் ஆளாகவில்லை. இது ஒரு நாடு கடந்த அரசாங்கமாகும். அதாவது இராஜதந்திரம் மற்றும் கல்விச் செயற்பாடுகளின் ஊடாக பரப்புரைகளை மேற்கொள்வதே இதன் நோக்காகும்.
தமிழர்களுக்கான தனிநாடு ஒன்று உருவாகுவதற்கான சாத்தியங்கள் ஏற்பட்ட பின்னர் தமிழீழ தேசத்திற்கான உண்மையான அரசாங்கமும் வரையறுக்கப்படும்.
புலம்பெயர் தமிழர்களால் செயற்படுத்தப்படும் தேசிய, உள்ளுர், மற்றும் அனைத்துலக தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுவதே TGTE யின் பிரதான மூலோபாயமாகும். அத்துடன் சாத்தியப்பாடான எல்லா அரசாங்கங்களுடனும் இராஜதந்திர ரீதியான வலு மையம் ஒன்றை உருவாக்குவதும் இதன் நோக்காகும்.
சிறிலங்காவிற்குள் உள்ள தமிழ்த் தலைமைத்துவங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியங்களையும் TGTE ஆராய்கின்றது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் பக்கச்சார்புடன் எந்தவொரு உத்தியோகபூர்வமற்றதாகக் கூட எந்தவொரு உறவையும் பேண முடியாது.
பிரிட்டனிடமிருந்து 1947-8 காலப்பகுதியில் சுதந்திரம் பெற்றதிலிருந்து "எங்களுடைய மக்களது சித்தனைப்பாடானது பழைமைபேண் சிந்தனைக்குள்ளேயே சிக்குண்டிருந்தனர்" என பிரதமர் உருத்திரகுமாரன் விளக்கினார்.
"நாங்கள் தேசியவாதிகள், புரட்சிவாதிகளல்ல. நாங்கள் சாதி வேறுபாடுகளைக் கொண்டிருந்தோம். அத்துடன் எமது பெண்கள் சமமாக மதிக்கப்படவில்லை. சமாதானமாகவும் அதாவது வன்முறையற்ற விதத்தில் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் சம உரிமை பெற்று வாழ விரும்பினோம். ஆனால் சிங்கள அரசாங்கங்கள், இன மேலாதிக்க காடையர்கள், மற்றும் ஏனைய தீவிரவாதிகள் எமமை அடித்து துன்புறுத்தி கொலை செய்தார்கள். பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பயங்கரமான நடவடிக்கைகள் மூலம் கொல்லப்படுவதற்கேற்ப இவர்கள் பல படுகொலைகளை மேற்கொண்டார்கள். இறுதியில் 1976ல் நாடாளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த தமிழ் அரசயில் கட்சிகள் அதாவது பழமை பேண் கட்சிகளிலிருந்து நவீன புரட்சிகரக் கருத்துக்களைக் கொண்ட அரசியற் கட்சிகள் வரை எல்லோரும் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் சுதந்திர தாய்நாடொன்றை உருவாக்கவேண்டும் என தீர்மானித்துக் கொண்டனர்" என பிரதமர் உருத்திரகுமாரன் மேலும் தொடர்ந்தார்.
"விடுதலைப் போராட்டமானது ஆயுதத்தை எப்போது கையில் எடுத்ததோ அன்றிலிருந்து தமிழர்கள் மீது போடப்பட்டிருந்த எல்லாத் தடைகளும் உடைத்தெறியப்பட்டன. இந்த அடிப்படையில், ஆயுதப் போராட்டத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றினர். தமிழீழ விடுதலைப் புலிகள் எமக்கு கௌரவத்தையும், போராடுவதற்கான பலத்தையும் தந்தார்கள். இன்று இப்போராட்டமானது இராஜதந்திரக் கப்பலில் அதாவது இராஜீக வழியில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் முன்னோக்கிப் பார்க்கிறோம். புலிகள் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள் என்பது தொடர்பாகவோ அல்லது கடந்த காலத்தைப் பற்றியோ நாம் ஆராயவில்லை" எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
TGTE யின் வழிகாட்டல் கோட்பாடுகள்:
01. சுதந்திரமான, இறைமையுள்ள, தாய்நாடான, சுய நிர்ணய உரிமையைக் கொண்ட ஈழத்தை அடைவதற்காகப் போராடுதல்
02. தமிழீழம் என்பது உலகியல் சார்ந்த அதாவது மதச்சார்பற்ற நாடாக இருத்தல்.
03. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இல்லங்களை அமைத்தல், தாய்நாட்டில் சுகாதார வசதிகளை உருவாக்குவதில் உதவுதல், ஈழத்தமிழர் என்ற அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக கலாசார நிகழ்வுகளை அதிகம் ஊக்குவித்தல். TGTE ஆனது சிறிலங்காவில் செயற்பட முடியாதபோதும் இவ்வாறான செயற்பாடுகளை மறைமுகமாக செய்யவேண்டியுள்ளது.
04. தாய்நாட்டில் கல்விச் செயற்பாட்டை அதிகரித்தல்
05. பொருளாதார நலன்களை அதிகரித்தல்
06. சந்திப்புக்கள் மூலம் வெளியுறவுத் தொடர்புகளை மேற்கொள்ளுதல்
07. பெண்கள் மற்றும் சகல தமிழ் மக்களின் சமஉரிமையைப் பாதுகாத்தல்
08. மாவீரர் குடும்பங்கள், முன்னாள் போராளிகுடும்பங்கள், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் போன்றோரின் தேவைகளை முன்னுரிமைப்படுத்துதல். சிறிலங்கா அரசாங்கமானது மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்த காரணத்தால், புலம்பெயர் உறவுகளின் மத்தியில் மாவீரர்களின் நினைவாக செயன்முறைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல்.
தமிழர் இறையாண்மைக்காகப் போராடுகின்ற ஐரோப்பாவில் உள்ள ஈழத்தமிழர் சபை மற்றும் உலக தமிழ் ஈழம் போன்ற அமைப்புக்களுடனும் TGTE ஆனது நல்லதோர் உறவைப் பேணி வருவதாகவும், "இந்த நிறுவனங்களின் நோக்கங்களும் எமது நோக்கமும் ஒன்றாகும். அதாவது ஆயுதம் ஏந்தாது அமைதி வழியிலும் ஜனநாய வழியிலும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதே எமது நோக்காகும். ஆனால் TGTE ஆனது தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடுகடந்த அரசாங்கமாகும்" என பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
"எமது எதிர்கால வளர்ச்சி தொடர்பாக நாம் உந்துதலளிக்கப்பட்டிருக்கிறோம். 2005ல் தென்சூடானில் கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு 98.3 வீத வாக்குகள் நாடானது பிரிக்கப்படவேண்டும் என்பதற்கு ஆதரவாக வழங்கப்பட்டிருந்தது. ஆகவே இது எமக்கு சாதகமானதாகவே உள்ளது. TGTE ஆனது யூலை 10 அன்று யுபாவில் இடம்பெற்ற அரசாங்கத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டது" எனவும் அவர் தெரிவித்தார்.
சல்வா கிர் புதிய அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்ட போதும் அவர் புதிய அதிபராகப் பதவியேற்பு செய்தபோதும் TGTE இன் பிரதி வெளியுறவு அமைச்சர் கனகரட்ணம் மாணிக்கவாசகர் மற்றும் பிரதமரின் பேச்சாளர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் சூடான் அதிபர் ஒமார் அல்-பசீர், ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான் கீ-மூன் உடபட பல நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறிலங்காவானது விஞ்ஞானத்துறை சார்ந்த மூத்த அமைச்சர் திஸ்ஸ விதாரண என்கின்ற கீழ்மட்ட பிரதிநிதியையே அனுப்பியிருந்தது.
ஐ.நாவால் 193 ஆவது நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட தென்சூடானை வாழ்த்துவதாகவும், "சுதந்திரமான ஒரு தேசமாக உங்களது நாடு உதயமாவதற்காக நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் மற்றும் தியாகம், உங்களது துணிச்சல், உறுதி போன்றவற்றுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்" என பிரதமர் உருத்திரகுமாரனின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
"தென்சூடானியக் குடியரசைப் போலவே எமது மூலோபாயமும் ஒத்ததாக உள்ளது. தென் சூடானில் நடந்தது போல சுதந்திரமான கருத்துக் கணிப்பொன்று ஈழத்திலும் நடாத்தப்பட வேண்டும் என அனைத்துலக சமூகமானது அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம். இவர்களைப் போலவே எமது மக்களும் படுகொலைகள், மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் எனப் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர்" எனவும் பிரதமர் மேலும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கெரில்லாக்கள் யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான கருத்து வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துமாறும் கோரியிருந்தனர். இறுதியில், 2001 இல், யுத்த நிறுத்தமானது நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச 2004 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், தமிழ் எதிர்க்கட்சியை அழித்தொழிப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டார்.
இவர் யுத்தநிறுத்த நடைமுறைகளை மீறிக்கொண்டதுடன், அமெரிக்காவின் புஸ் நிர்வாகத்திடமிருந்து தொழில்நுட்ப ஆதரவுகளையும் யுத்த ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டார். அத்துடன், கனரக ஆயுதங்கள், தொடர்பாடல் கட்டுமானங்கள், படகுகள் மற்றும் யுத்த விமானங்கள் போன்றவற்றை சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
போர் விமானங்கள், புலனாய்வு அமைப்புக்கள், தொழினுட்ப உதவிகள் போன்றவற்றை இஸ்ரேலிடமிருந்தும், படகுகள், ஏவுகணைகள், நிதி போன்றவற்றை இந்தியாவிடமிருந்தும், எரிபொருள், ஆயுதங்கள் போன்றவற்றுக்கான நிதியை ஈரானிடமிருந்தும், போராயுதங்களை பாகிஸ்தானிடமிருந்தும் ஆயுதங்கள், தொடரணிப் படகுகள் போன்றவற்றை பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்தும், தொழினுட்ப உதவிகள், கடன்கள் போன்றவற்றை யப்பானிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்.
"இறையாண்மை தேசத்தை உருவாக்குவதற்காக நாம் காட்டும் திறமை, ஆளுமை, அர்ப்பணிப்பு என்பவற்றின் ஊடாக நாம் செயற்படுகிறோம். நாம் எமக்கான இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம். நாம் எமக்கான தேசியத்தைப் பெறுவதற்காகவே போராடுகிறோமே தவிர கருத்தியல் ரீதியாகவோ அல்லது பொருளாதரத்தை அடிப்படையாக வைத்தோ நாம் போராடவில்லை" எனவும் பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
சிறிலங்காவிற்கு ஆதரவான தனது நிலைப்பாட்டை இந்தியாவானது மாற்றிக் கொள்ளும் என பிரதமர் உருத்திரகுமாரன் நம்புகிறார்.
சிறிலங்காவின் பூகோள – அரசியல் நிலைப்பாடே தற்போது சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் நலன்கள் இதன் மீது திரும்பக் காரணமாக அமைந்துள்ளது எனவும் இவர் தெரிவித்தார்.
சீனாவின் செல்வாக்கானது சிறிலங்காவில் அதிகரித்துள்ளதால், இதில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக இந்தியாவிற்கு தெரியாதுள்ளது. ராஜபக்ச அரசாங்கத்தின் உதவுவதன் மூலம் தனக்கான நீண்டகால நலனை அடையலாம் என இந்தியா நினைப்பதைத் தான் நம்பவில்லை என்றும் இதனை இந்தியாவானது மிகவிரைவில் உணர்ந்து கொள்ளும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
செப்ரெம்பர் 12-30 வரை இடம்பெற்றமனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத் தொடரில் தமிழர் நிலைப்பாடு முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நாவின் வல்லுனர் குழுவால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்கள் அடங்கிய அறிக்கையானது மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்தாலோசிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது போல் தெரிகிறது. இது குறைந்தது பான் கீ-மூனாலும், மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் நவி பிள்ளையாலும் பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிக்கை கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. இதில் சிறிலங்காவின் நீண்ட கால உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வந்த 2009 மே மாத காலப்பகுதியில் யுத்த வலயத்திற்குள் அகப்பட்டுக்கொண்ட தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியிருப்பதுடன், இதற்கு சிறிலங்கா அரசாங்கப் படைகளே பொறுப்பாளிகள் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போதைய மனித உரிமைகள் கூட்டத் தொடரில் முன்னெப்போதுமில்லாதவாறு இந்தியாவோ அல்லது ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளோ வார்த்தையளவில் கூட சிறிலங்காவிற்குச் சார்பாக தமது கருத்துக்களை முன்வைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

No comments:
Post a Comment