இலங்கையின்
தேசிய விமானசேவையான "ஸ்ரீலங்கன்" விமானங்கள் ஐரோப்பிய வான் பரப்பில் பறக்க
தடைவிதிக்கப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.
இதில் பல விடையங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளபோதும் சில செய்திகள் தற்போது
கசிந்துள்ளது. அதாவது கடந்த மாதம் இலங்கை தேசிய விமானசேவைக்குச் சொந்தமான
ஏ- 340 ரக விமானம் ஒன்றை பிரான்ஸ் நாட்டு விமானசேவை அதிகாரிகள் சுமார் 9
நாட்களாகத் தடுத்துவைத்துள்ளனர். இச் செய்தியானது எந்த ஊடகத்திலும்
கசியவில்லை. இலங்கையிலும் இச் செய்தியானது தற்போது தான் கசிந்துள்ளது.
இலங்கை விமானத்தின் எஞ்சினில் உள்ள நட்டுகள் சில இறுக்கமாகப்
பூட்டப்படவில்லை என்பதும் அவை களண்டு விழும் நிலையில் உள்ளமையும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அதனைத் திருத்தும்படி பிரான்ஸ் அதிகாரிகள் கூற அதனை ஒரு அசமந்தமாக ஏற்றுகொண்ட இலங்கைப் பொறியியலாளர்கள் சரியாக அதனைத் திருத்தவில்லை. இதனை அடுத்து மேலதிக பரிசோதனைகளை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் மேற்கொள்ள குறித்த விமானத்தின் பெற்றோல் தாங்கில் இருந்து பெற்றோல் சிறிது கசிவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான ஒரு விடையமாக நோக்கப்பட்டது. அதனையும் சரிசெய்ய பிரன்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே தாம் இலங்கைக்குச் சென்று அதனைத் திருத்துவதாக சிறுபிள்ளைத் தனமாகத் தெரிவித்துள்ளனர் இலங்கை விமானசேவை நிறுவனத்தினர். அதனை நிராகரித்த பிரான்ஸ் அதிகாரிகள் பிரான்ஸ் பொறியியலாளர்களைக் கொண்டு அதனைத் திருத்திவிட்டு செலவான முழுப் பணத்தையும் இலங்கை கட்டவேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனால் சுமார் 9 நாட்கள் அவ்விமானம் பிரான்சில் தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதன் காரணமாக அவ்விமானம் கொண்டுசெல்லவேண்டிய பயணிகளை வேறு விமானத்தில் ஏற்றி அனுப்பிய செலவு, மற்றும் அவ்விமானத்தின் ஊழியர்கள் விடுதியில் தங்கிய செலவு, மற்றும் விமான விமான நிலையத்தில் தரித்து நின்றதற்காக செலவு என ஏராளமான யூரோக்கள் செலவாகியுள்ளது இலங்கை அரசுக்கு. குறிப்பாக ஐரோப்பிய வான் பரப்பில் பறக்கும் விமானங்கள் தமது தரத்துக்கு ஏற்றாறு இருக்கவேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் குறிக்கோளாகும். தரமில்லாத விமானங்கள் தமது வான்பரப்பில் பறந்து விபத்துக்கு உள்ளானால் அது ஐரோப்பிய நகரங்களை கடுமையாகப் பாதிக்கும் என்பது அவர்கள் கருத்து.
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட தரத்தைப் பேணாத பல நாட்டு விமானங்களை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்தோனேசியா பிலிப்பைன் மற்றும் ஆபிரிக்க நாடுகளின் பல விமானசேவைகள் இவ்வாறு ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் இலங்கையின் விமானமும் தடைசெய்யப்படலாம் என பிரான்ஸ் எச்சரித்துள்ளதாக அறியப்படுகிறது. இது இலங்கை அரசுக்கு விழுந்துள்ள மற்றுமொரு பாரிய பேரிடியாகும்.

No comments:
Post a Comment