Thursday, October 27, 2011

“உரிமைக்கு குரல் கொடுப்போம் தேசியத்தை வென்றெடுப்போம்” - இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை

எதிர் வரும் 29-10-2011 அன்று சனிக்கிழமை ரொறன்டோவில் நடைபெறவிருக்கும் பொங்கு தமிழ் பேரணியில்,கனடாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் பெருந்திரளாக அணி திரண்டு வலு சேர்பதன் மூலம் சிறிலங்கா அரசு மேற் கொண்ட தமிழீழ படுகொலைக்கு, நீதி கேட்போம் வாரிர் என இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையானது  அழைப்பு விடுக்கின்றது. அது மட்டுமல்லாது தனது ஆதரவையும் தெரிவிக்கின்றது சிறிலங்கா அரசாங்கம் காலம் கலமாய் மேற்கெண்டு வருவது இனஅழிப்பு போரே என நிரூபிக்கும் ஆதாரங்கள், அதனுடான அறிக்கைகளும் தொடர்ச்சியாக வெளி வந்த வண்ணம் உள்ளது, இருப்பினும் இவற்றை எல்லாம் சிறிலங்கா அரசு மறுத்தும் ஊதாசினப்படுத்தி வருவது மட்டுமல்லாது தமிழ் மக்கள் மீது இராணுவ பொறி முறைåடாக பல்வேறு வடிவங்களில் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது, தமிழ் மக்களை எப்போது அடிமைகளாகவும், பயம் கொண்டவர்களாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக  கிறீஸ் மனிதன் என்ற வடிவில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு அதனூடாக  மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்;கு சிறிலங்கா அரசு மேற்கொண்ட கபட நாடகம் முதலில் அரங்கேறியது.
அதன் பின் புலம் பெயர் தேசிய கட்டமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் வேலைப்பாடுகளால் கிறீஸ் மனிதன் என்ற பதம் காணாமல் போய்விட்டது. அதன் அடுத்த நகர்வாக நேரடியாக சிறிலங்கா அரசின் இயந்திரம் மீண்டும் மாணவர்கள் மீது தனது பார்வையைத்திருப்பியுள்ளது, அதன் விளைவுதான் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்  சுப்பிரமணியம் தவபாலசிங்கம் தாக்கப்பட்டதும் மீண்டுமாய் பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்சியாக தாக்குதலுக்கு உள்ளாவதும் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.
சிறிலங்கா அரசாங்கம் சுதந்திரம் அடைந்த 1948ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மேற்கொண்டு வருகின்ற தமிழின படுகொலைiயினை சர்வ தேசத்திற்கு மறைப்பதற்கு பொய்யான பிரச்சாரத்தை; சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டது. இறுதிக்கட்ட போரில் உச்சக் கட்ட தமிழின அழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டதின் மூலம் இன்று சர்வ தேசம் உண்மை நிலையினை தற்போது விளங்கிக் கொண்டுளது, இருப்பினும் தமிழர்களுக்கான நீதியினை சிறிலங்கா அரசாங்கம் வழங்கும் என தவறான கணிப்பீட்டை மாற்றியமைத்து தமிழர்களை இல்லாதொழித்து சிறிலங்கா பௌத்த சிங்கள நாடாக மாற்றியமைப்பதே சிங்கள அரசுகளின் ஒரே நோக்கம் என விளங்கிக் கொண்டு தமிழ் மக்களால் ஆணை பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கான நீதியினை வழங்க சர்வ தேசம் முன் வர வேண்டும்.
சிறிலங்காவில் இடம்பெறுவது இன அழிப்பே என்பதனை சர்வதேசம் மெல்ல மெல்ல விளங்கி வருகின்ற இவ் வேளையில் தொடர்சியான எமது போராட்டங்களின் மூலமே எமக்கு நடந்தது உண்மையில் இன அழிப்பு என்பதனையும், எமக்கான நீதியினையும் சர்வதேசத்திலிருந்து பெற முடியும்.
எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய கனடா வாழ் தமிழ் மக்களே ரொறன்ரோவில் நடைபெறவிருக்கும் பொங்கு தமிழ் பேரணியில் பெருந்திரளாக கலந்து கொண்டு வலு சேர்ப்பதன் மூலம் எமக்கான நீதியினை சர்வதேசத்திடம் கேட்டு நிற்பது மட்டுமில்லாது, எமது ஒற்றுமையையும், பலத்தையும் சர்வதேசத்திற்கு மீண்டும் புடம் போட்டு காட்டுவதுடன் எமது தேசிய விடுதலைப் பயணம், தேசியத் தலைமையின் கீழ் தொடரும் என்பதனையும் எடுத்துக் காட்டுவோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை

No comments:

Post a Comment