நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் உபதேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக பிரான்சில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1) தேர்தல் தொகுதி - 92ம் மாவட்டம் திருமதி. திருநாவுக்கரசு மனோவதனி
2) தேர்தல் தொகுதி - 93ம் மாவட்டம் திரு. மைக்கல் கொலின்ஸ் ஜோசப் திரு. கருணைராஜன் முத்தையா
3) தேர்தல் தொகுதி - பிரான்ஸ் வட பிராந்தியம் திரு.பாக்கியசோதி வள்ளுவன்
4) தேர்தல் தொகுதி - பிரான்ஸ் தென் பிராந்தியம் திரு. நீக்குலாஸ் மரியதாஸ் நிக்கோலாஸ் ஜோய்
ஆகிய ஐவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம்-பிரானஸ் தெரிவித்துள்ளது.
மே 02, 2010 இல் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் தேர்தலில் தேர்தல் தொகுதி 92, 93 மாவட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக குறித்த மாவட்ட தேர்தல்கள் செல்லுபடியாகா என்று தேர்தல் ஆணையத்தினால் முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன், பிரான்சின் வட பிராந்தியம், தொன் பிராந்தியம் ஆகிய இரண்டு தேர்தல் தேர்தல் தொகுதிகளது உறுப்பினர்கள் அரசவையில் இருந்து விலகிக் கொண்டிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட தேர்தல் தொகுதிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்புவதற்குரிய உபதேர்தல் தேர்தல் மூலம் மேற்குறிப்பிட்ட ஐந்து உறுப்பினர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு, மக்கள் பிரதிநிதிகள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாதம் ஊடகசேவை
No comments:
Post a Comment