தன்
மீது நடத்த உத்தேசிக்கப்படும் விசாரணையானது முழு நீதித்துறையின்
சுயாதீனத்தையும் பாதிக்கும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா
கூறியுள்ளார். ஆளும்கட்சியில் இணையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை தான்
நிராகரிக்கத் தீர்மானித்தமையின் காரணமாக இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரித்தமை குறிப்பிடத்தக்கது.
நிதிமுறைக்கேடுகள் தவிர்ந்த வேறு எதைப் பற்றியும் நாடாளுமன்றம் விசாரிக்க முடியாது எனவும் அவர் செய்தியளார் மாநாட்டில் கூறினார்.
சரத் என் சில்வா பிரதம நீதியரசராக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகள் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டுமென கோரும் மனுவொன்றை அரசாங்கத் தரப்பு எம்.பி.கள் சிலர், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் யைளித்தமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சரத் என் சில்வா தனது பதவிக்காலத்தில் நீதித்துறைக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவரின் நியாயமற்ற தீர்மானங்களால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் மேற்படி எம்.பிகள் கோரியுள்ளனர்.
இந்நிலையில் இத்தகைய விசாரணை மோசமான முன்னுதாரணமாகிவிடும் எனவும் சிரேஷ்ட நீதித்துறை அதிகாரிகள் சுயாதீனமாக செயற்படுவதை இது தடுக்கும் எனவும் சரத் என்சில்வா கூறியுள்ளார்.

No comments:
Post a Comment