சிறிலங்கா
கடற்படையால் ஒழுங்கு செய்யப்பட்ட காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில்
பங்கேற்க அழைக்கப்பட்ட ஏழு நாடுகள் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளன.
சிறிலங்கா கடற்படை காலி கடல்சார் பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் கடந்த ஆண்டு தொடக்கம் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. நேற்று இரண்டாவது கடல்சார் பாதுகாப்பு மாநாடு காலியில் உள்ள வெளிச்சவீட்டு விடுதியில் தொடங்கியது.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு சிறிலங்கா கடற்படை 25 நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அழைப்பு விடுக்கப்பட்ட நாடுகளில் 18 நாடுகளே இந்த மாநாட்டுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன.
அவுஸ்ரேலியா, பங்களாதேஸ், கனடா, சீனா, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், கென்யா, மலேசியா, மாலைதீவு, மியான்மர், ஓமான், பாகிஸ்தான், கட்டார், ரஸ்யா, சிசெல்ஸ், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, தென்கொரியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய 25 நாடுகளுக்கே அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.
இவற்றில் சிங்கப்பூர், சிசெல்ஸ், தாய்லாந்து, மியான்மர், தென்னாபிரிக்கா, பிரித்தானியா, கனடா ஆகிய ஏழு நாடுகளும் அழைப்பை புறக்கணித்துள்ளன.
அதிகார்பூர்வ அழைப்பு விடப்படாத நைஜீரியா இந்த மாநாட்டுக்கு தமது பிரதிநிதியை அனுப்பி வைத்துள்ளது.
பிரித்தானியாவும், தென்னாபிரிக்காவும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கவும், ஆய்வுரைகளை சமர்ப்பிக்கவும் இணங்கியிருந்தன. ஆனால் கடைசிநேரத்தில் இவை மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்தன.
அத்துடன் முன்னதாக இந்தியக் கடற்படையின் உயர் தளபதி ஒருவர் கலந்து கொளவார் என்று கூறப்பட்ட போதும் கப்டன் தரத்திலான அதிகாரி ஒருவரையே இந்தியா ஆனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்காவின் சார்பில் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலரும், சீனகடற்படையின் பிரதி தளபதியும் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் இந்தியா தனது சார்பில் இளநிலை அதிகாரி ஒருவரை ஆய்வுரை சமர்ப்பிக்க அனுப்பியுள்ளது சிறிலங்காவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதேவேளை, கனடா, பிரித்தானியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் இந்த மாநாட்டை அரசியல் காரணங்களினாலேயே புறக்கணித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து நம்பகமான அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று இந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

No comments:
Post a Comment