நாட்டின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாக பிரச்சாரம் செய்ய சிலர் எடுத்த முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, பேர்த்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அமைப்புத் தலைவர்கள் மாநாட்டின் போது நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து கனடா கேள்வி எழுப்ப முயற்சித்த எடுத்த போதிலும் அதனை தோற்கடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை எந்தவொரு நாட்டினதும் காலனித்துவ ஆட்சியின் கீழ் இல்லை. எனவே எந்தவொரு நாட்டினதும் கட்டளைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
எந்த நாட்டுத் தலைவரும் பிறப்பிக்கும் கால எல்லையின் அடிப்படையில் இலங்கை செயற்டபாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன் அண்மையில் இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment