Wednesday, November 02, 2011

சிலையாக இருக்கக் கூடத் தமிழனுக்கு இடமில்லை! மீண்டும் ஒட்ட வைத்த செல்வாவில் தலை!!

திருகோணமலையில் கொய்து எடுக்கப்பட்ட தந்தை செல்வாவின் தலை இன்று மாலை மீண்டும் அதேயிடத்தில் வைக்கப்பட்டு பழைய தோற்றத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர சபையின் தலைவர் க.செல்வராசாவலினால், தந்தை செல்வாவின் இச் சிலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவருடன் நகர சபையின் உப தலைவர், உறுப்பினர்களும் மற்றும் இராணுவ முக்கியஸ்தர்கள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


இந் நிகழ்வைத் தொடர்ந்து நகரசபைத் தலைவர் உரையாற்றுகையில், தற்பெழுது சுமூகமான நிலையில் இப்படி ஒரு சம்பவம் இடம் பெற்றது கவலைக்குரிய விடயம்.



அத்துடன் எமது கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் வெளிநாட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் எமது தலைவரின் சிலை உடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சமாதானத்தை நிலை நாட்டும் முகமாக மூவின மக்களுக்கு மத்தியில் இச்சிலையை திறப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என அங்கு தெரிவித்தார்.

அதேநேரம் தமிழ் மக்கள் சிலையாகக் கூட இலங்கையில் இருப்பதற்கு அனுமதியில்லை என்பதை மேற்படி தந்தை செல்வாவின் சிலை உடைப்புத் தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே ஒரு இன ஒற்றுமையை, ஒருங்கமைத்து மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழக் கூடிய சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுப்பது காலத்தின் தேவையாகும்.




No comments:

Post a Comment