இராணுவ விசேட அதிரடிப்படையின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவின் முன்னாள் சார்ஜன்ட் மேஜர் ஒருவரே இந்த குழுவை வழி நடத்தி வருவதாகவும் வவுனியா மாமடு பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது இவ் ராணுவ அதிகாரி ஒரு காலை இழந்தவர்.
அங்கவீனம் காரணமாக சேவையில் இருந்து விலகி கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அவர் தற்போது விசேட அதிரடிப்படையின் தலைமையத்தில் இருந்து பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கு அமைய ஆட்கடத்தில் சம்பவங்களை வழி நடத்தி வருவதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இவர்கள் கொழும்பில் உள்ளவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்லும் போது அதற்கு தேவையான பாதுகாப்பு கொழும்பு பிராந்திய கட்டளை தளபதி பிரிகேடியர் சாந்த திஸாநாயக்கவினால் வழங்கப்படுகிறது. இவரது கட்டளையின் படியே இராணுவ சோதனை சாவடிகளை தாண்டி இவர்கள் ஆட்களை கடத்திச் செல்கின்றனர் எனவும் லங்கா ஈ நியூஸ் தெரிவித்துள்ளது.
மத்துமகே வசந்த என்ற குறித்த இராணுவ அதிகாரி, விசேட அதிரடிப்படையில் பணியாற்றும் காலத்தில் அதன் பொறியியல் படைப்பிரிவில் பணியாற்றி வந்ததுடன் ஆழ ஊடுருவும் படைப் பிரிவில் செயற்பட்ட திறமையான அதிகாரி எனவும் . இவர் ஹோமாகம மாகம்மன வெதகேவத்தை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு உதவியாக அதிரடிப்படையை சேர்ந்த மேலும் 6 பேர் பணியாற்றி வருவதாகவும் இவர்களும் தற்போது அதிரடிப்படையில் உத்தியோகபூர்வமாக பணியாற்றவில்லை எனவும் அத்தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இராணுவ அதிரடிப்படையில் முன்னர் பணியாற்றிய கேணல் ஜயந்த ரத்நாயக்க என்பவரே மத்துமகேவை பாதுகாப்புச் செயலாளருக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இவர் முன்னர் கோத்தபாயவின் கஜபா படைப்பிரிவில் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment