Friday, November 04, 2011

இலங்கை விவகாரம் தொடர்பாக சித்திரவதைகளுக்கெதிரான குழு அவசர ஆலோசனை!

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வரும் சூழ்நிலையில், அது குறித்து ஆராய்வதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஓர் அமைப்பான சித்திரவதைகளுக்கெதிரான குழு (Committee Against Torture)  எதிர்வரும் 8ம், 9ம் திகதிகளில் ஜெனிவாவில் அவசரமாகக் கூடவிருக்கின்றது.

இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து ஏற்கனவே ஆராய்ந்திருக்கும் இந்தக் குழு, அது குறித்ததான சிபார்சுகளைக் கடந்த காலங்களில் இலங்கையிடம் கொடுத்திருந்தது.
இப்போது அந்தச் சிபார்சுகள் இலங்கை அரசால் கிரமமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி இந்தக் குழு ஆராயுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் மனித உரிமைகள் மேம்பாட்டில் ஆரோக்கியமான நிலைமை இல்லையென உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் செய்துள்ள முறைப்பாடுகளையும் சித்திரவதைகளுக்கெதிரான குழு இந்தத் தடவை விரிவாக ஆராயவிருக்கிறது.
அதேவேளை, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அளித்திருக்கும் விளக்கமும் இந்தக் கூட்டத்தின்போது தீவிரமாக ஆராயப்படவிருக்கிறது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச ஜூரர்களுக்கான ஆணைக்குழு, இலங்கை அரச சார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்பு உட்பட்ட நிறுவனங்கள் செய்திருக்கும் விமர்சனங்களும் இந்தக் கூட்டத்தின்போது விரிவாக ஆராயப்படவுள்ளன.

No comments:

Post a Comment