அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார் நேற்று மாலை வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உயர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்புத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ் நிலைச் செயலர் வென்டி சேர்மனை சந்தித்துப் பேசியுள்ளது.
இந்த மாதம் வெளிவரப் போகும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து உயர்ந்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளோம் என்பதே சேர்மனின் பிரதான கண்ணோட்டமாக இருந்தது.
இந்த அறிக்கை உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டியது மட்டுமன்றி, அதனை நடைமுறைப்படுத்தவும் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது தான் முக்கியமான செய்தி. அதனை நாம் சொல்லி விட்டோம்.
அறிக்கை தொடர்பாக மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்று விக்ரோரியா நுலன்ட் அம்மையார் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment