பிரான்சின் பிரதான மாவீரர்நாள் நிகழ்வு பிரான்ஸ் தமிழர்
ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பரிசின் புறநகர்ப்பகுதியான டுந
டீழரசபநவ நகரில் பகல் 12.45 மணியளவில் தமிழீழத் தேசியக் கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகியது.
தொடர்ந்து மண்டபத்துள் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து மாவீரர்களுக்குமான பொது தூபியின் முன்னே மணி ஒலிக்க 13.05 மணிக்கு பொதுச் சுடரினை பிரதமவிருந்தினரான பேராசிரியர் முருகர் குணசிங்கம் ஏற்றியதைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்போரில் இதுவரை உயிர்நீத்த மாவீரர்களுக்கும், சிறீலங்கா, இந்திய இராணுவத்தாலும், இரண்டகர்களாலும் படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர்கள், பொது மக்களுக்குமாக அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரரின் உரித்துடையோரால் மாவீரரின் உருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப் பட்டது.
தொடர்ந்து பல்லாயிரக் கணக்கில் திரண்டிருந்த மக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
வாத்திய இசைவணக்கத்தைத் ( மாவீரர் பாடல்) தொடர்ந்து மாவீரர் நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சகல பிரிவிலும் முன்னணியில் இருந்தோரின் பேச்சுக்கள் இடம்பெற்றன.
அதைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் விடுதலைக் கானங்கள் இசைக்கப்பெற்றன.
தமிழ்ச் சோலை மாணவர்களினால் மாவீரர் எழுச்சி கானங்களுக்கு நடன அஞ்சலிகள் நடை பெற்றன.
நிகழ்வுகளின் இடையே மாவீரர் நாளை முன்னிட்டு நடாத்தப்பட்ட கலைப் போட்டிகளில் முன்னணியில் இருந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதேவேளை பிரான்ஸ் கலை பண்பாட்டுக் கழகத்தினால் தயாரிக்கப்பட்ட ஷதலைவன் யுகத்தில் உயர்ந்திடுவோம்| இறுவட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. முதல் பிரதியை கர்நாடக தமிழ் உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான திரு. குப்பன் கணேஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரான்சில் தமிழர்களோடு ஒன்றிணைந்து செயல்பட்டு வரும் கிளிசி மாநகர முதல்வர், உதவி முதல்வர்கள், செவ்ரோன் மாநகர முதல்வர், இவிறி மாநகர முதல்வர் மற்றும் மறாப் அமைப்பின் தலைவர், குர்திஸ்தான் விடுதலை அமைப்பின் பிரான்ஸ் பிரதிநிதி ஆகியோர் உரையாற்றினர்.
நிகழ்வில் சிறப்பு உரையினை வரலாற்றுப் பேராசிரியரும் இலங்கையில் தமிழர் ஒரு முழுமையன வரலாறு நூலின் ஆசிரியருமான கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் ஆற்றினார்.
தொடர்ந்து தமிழகத்திலிருந்து திரு பழ நெடுமாறன் அவர்களின் மாவீரர்நாள் விவரணம் ஒளிபரப்பப்பட்டது.
இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலை பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் பாடப்பட்டது அதன்போது மண்டபத்தில் இருந்த மக்கள் கை ஒலி எழுப்பினர்.
இறுதி நிகழ்வாக தேசியக் கொடி இரவு 20.00 மணிக்கு இறக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.
இந்நிகழ்வில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அறிவிப்புச் செய்ததும், சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தமது ஒற்றுமையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment