Friday, November 04, 2011

யாழில் இராணுவம் நடத்தும் மதுக் கடையில் மது அருந்தும் மாணவர்கள்!! - சிறிதரன் எம்.பி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா அழைத்தமையானது அரசிற்கு ஒரு அரசியல் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர்களின் பிரச்சனைக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பதை அரசு விரும்பவில்லை. எப்படியாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பை தடை செய்வதற்கு அரசு முயல்வதாக நடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.


இன்று வியாழக்கிமை மாலை 5 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு தமிழ் மக்கள் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு முயலவில்லை என்றும் இலங்கையில் அமைதி, நிம்மதி வரவேண்டுமானால் தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டதுடன்,

வடக்கில் தமிழர் நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் தமிழர்களின் காணிகளில் சிங்கள ஆக்கிரமிப்புக்களைச் செய்து வருகின்றனர்.

குறிப்பாக மண்டைதீவுப் பகுதியில் தோட்டக் காணிகளில் 60 ஏக்கர் பரப்பில் அகரித்து கடற்படைத்தளமாக வைத்திருக்கினறர்கள். க்காணிகளுக்குள் தான் நல்ல தண்ணீரும் இருக்கிறது. ஆனால் அங்குள்ள மக்கள் குடிநீர் இன்றி அலைகின்றனர்.

தழிழ் மக்களின் நிலங்களை அபகரித்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர். முறிகண்டிக் கோயிலுக்கு அருகில் உள்ள அறிவியல் நகர் பகுதியில் சிங்கள மக்கள் காணிகளை விலைக்கு வாங்கி அங்கு குடியேறி வருகின்றனர். காணிகளை வாங்குவது ஒருபுறமிருக்க திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் குறியேற்றப்படுகின்றனர்.

தழிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாது விட்டால் அமைதியும் நிம்மதியான சகவாழ்வும் சகோரத்துவதுவம் இலங்கையில் எக்காலத்திலும் நிலைக்காது என்பதை சிங்கள தேசம் உணரவேண்டும். தமிழ் மக்களை மனோரீதியாகத் தாக்கி அவர்களின் இன உணர்வுகளை மழுங்கடிப்பதற்கு அரசு முயன்றுவருகிறது

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சாராய பார்களினால் இளைஞர்கள், 16 வயது பாடசாலை மாணவர்கள் சாராயத்தை வாங்கிக் கொண்டு தோட்டங்களில் வைத்து குடித்து விட்டு செல்கிறார்கள். இந்த நிலமைக்கு யார் காரணம்?

தமிழ் மக்களின் கலாச்சார மையமான யாழ்ப்பாணத்தின் நிலமைகள் அடியோடு மாறியுள்ளது. நாங்கள் அரசியல் பேசிக்கொண்டு இருப்பதினால் எந்தப்பிரயோசனமும் இல்லை.

எமது கலாச்சரத்தை பாதுகாப்பதற்காக புத்திஜிவிகள் ஊடகவியலாளர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட்டு எமது காலாசரத்தை பாதுகாக்க வேண்டும்.


திறக்கப்படும் மதுபான சாலைகளை நிறுத்த வேண்டும். அரசு ஏன் திட்டமிட்டு தமிழர் பகுதிகளில் சாராய பார்களை அமைப்பதற்கு அனுமதி வழங்குகிறது என்பது பற்றி யோசிக்க வேண்டும். மதுபானசலைகயோடு சேர்ந்து தான் யாழ்ப்பாணத்தில் விபச்சராம் நடக்கிறது.

யாழ்பாணத்தில் சிங்கள அரச உத்தியோகத்தர்களை நியமிகிறத்திற்கு அரசாங்கம் பரிசிலிக்கிறது. தங்களுடைய சிங்களக் குடியேற்றங்கள், காணிபறிப்புக்கள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு இது வசதியாக இருக்கும் என்பதினால் இவர்களை நியமிக்கின்றார்கள்.

நாங்கள் உணர்வு ரீதியான மக்களாக இருக்கக் கூடாது என்பதற்காக அரசு திட்டமிட்டு சிங்களக் குடியேற்ங்களை செய்து வருகின்றது.

வீடுகட்டுவதில் இருந்து தோட்டம் செய்வதிலிருந்து சலூண் நடத்துவது வரை இராணுவம் தான் செய்து வருகிறது. தமிழ்மக்கள் உழைத்து வாழமுடியாத நிலையில்தான் வாழ்கின்றார்கள்.

ஏன் இந்த நிலை என்றால் தமிழ் மக்களைக் கையேந்தும் நிலையில் வைத்திருக்கிறது. கையேந்தும் நிலையில் வைத்திருந்தால் அவர்கள் உணர்வு ரீதியாக, இனரீதியாக விடுதலை பற்றிச் சிந்திக்கமாட்டார்கள் இதைத்தான் அரசாங்கம் செய்து வருகிறது.

எங்கள் மக்கள் தங்களின் காணிகளில் தோட்டம் செய்யமுடியாத நிலையில் இருக்கும் வேளையில் அதே காணியில் இராணுவம் விவசாயம் செய்து எமது மக்களுக்கே விற்பனை செய்கிறது.

யாரும் விடுதலை உணர்வுடன் பேசினால் அவரின் வீட்டில் மாட்டுத்தலை அல்லது நாய்த்தலை தான் வீடுகளில் கிடைக்கும். இந்த நிலைதான் யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவுகிறது.

போர் குற்றத்தை விசாரணை செய்வதன் மூலம் போர்குற்றத்தை செய்தவர்களைத் தூக்கில் போடுவதால் தமிழ் மக்களுடைய பிரச்சனை தீர்ந்து விடும் என நாங்கள் நினைக்கவில்லை.

உண்மையில் இந்தப் போர்க்குற்றம் தமிழ் மக்கள் இனரீதியாக அழிக்கப்பட்டார்கள் என்பதை நிருபிக்கும். போர்க்குற்றம் விசாரிக்கப்பட்டால் சிங்கள அரசுகளினால் சிங்கள பெரும்பான்மை இனத்தால் தமிழ் இனம் அழிக்கப்பட்டது.

என்ற செய்தி உலகத்திற்கு வரும் ஆகவே தமிழர்களும் சிங்களவர்களும் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழமுடியாது என்ற உண்மை தெளிவாகப் புலப்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment