பிரித்தானியாவில் அகதிகள் உரிமை கோரிய 55 பேரின் அகதிகள் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் நாடு
கடத்தப்பட்டு இன்று காலைகட்டுநாயக்க விமான நிலையத்தை
சென்றடைத்துள்ளதாகவும் இவர்கள் மீது சிறீலங்கா புலனாய்வாளர்கள் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் சிறப்பு விமானம் ஒன்றின் ஊடாக இவர்களை சிறீலங்காவிற்கு அழைத்துசென்றுள்ளார்கள்.
பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டுள்ள 55 பேரில் 48 ஆண்களும் 7 பெண்களும் ஆகும் இவர்களில் 39 தமிழர்கள் 9 முஸ்லிம்கள் மற்றும் 7 சிங்களவர்கள் அடங்குகின்றனர்.
பதுளை யாழ்ப்பாணம் களுவாஞ்சிக்குடி வவுனியா திருக்கோணமலை வத்தளை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் இடம்பெற்ற போரின் போது அகதி அந்தஸ்த்து கோரி பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்தனர்.
இந்நிலையில் மாணவர் விசாவில் இருந்தமை உரிய ஆவணங்கள் சமர்பிக்காமை உள்ளிட்ட பல விடயங்களைக் கருத்திற் கொண்டு குறித்த 55 பேரும் பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சிறீலங்காவினை சென்றடைந்த இவர்கள் சிறீலங்காவின் குடிவரவு திணைக்கள அதிகாரிககள்பொறுப்பேற்று குற்றப்புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள் மீதான விசாரணையின் பின்னர் இவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment