Tuesday, December 20, 2011

பிரான்சில் இடம்பெற்ற தேசத்தின் குரல் 5ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

தமிழீழ தேசத்தின் குரல் பாலா அண்ணாவின்  5ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நந்தியார் என்னும் இடத்தில் நந்தியார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 18.12.2011 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 3.00 மணிக்கு வணக்க நிகழ்வுகளும் எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மாவீரரின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்களால் சுடர் வணக்கமும், மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது.
பாலா அண்ணன் என்ற தமிழீழ தேசக்குரலை நினைவு மீட்கும் கவிதையினை நந்தியார் தமிழ்ச்சோலையின் நிர்வாகி
வாசித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நந்தியார் தமிழ்ச்சோலை, குசன்வில் தமிழ்ச்சோலை நடன மாணவியர் விடுதலைப்பாடல் அபிநய நடனங்களையும், மாணவர்கள் விடுதலைப்பாடல்களை இசைத்தட்டின் மூலமும் வழங்கினர்.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக அதன் உறுப்பினர் திரு.சத்தியதாசன் அவர்களும் நந்தியார் தமிழ்ச்சங்கம் சார்பாக ஆசிரியர் பிரபா அவர்களும் தேசத்தின் குரல் பாலா அண்ணனின் சாதனைகள் பற்றிய நினைவு மீட்டல் உரையினை வழங்கினர்.
தேச உணர்வோடும், நாங்கள் தமிழர்கள் என்ற இனமான உணர்வோடும் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தமது வழிகாட்டிகளுக்கும், மாவீரர்களுக்கும் இந்நாளில் வணக்கம் செய்திருந்தனர். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன்  நிகழ்வுகள் யாவும் மாலை 18.00 மணிக்கு இனிதே நிறைவுபெற்றன.













No comments:

Post a Comment