கடந்த
சில மாதங்களாக தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான தமிழ் உணர்வாளர்கள்
அனைவரும் முல்லைப் பெரியாறு அணையைக் காக்கவேண்டும் என கேரள அரசுக்கு
எதிராகப் போர்கொடி தூக்கியுள்ளனர். அணையை உடைக்கவேண்டும் எனக் கேரள அரசும்
உடைக்கக்கூடாது எனத் தமிழ் உணர்வாளர்களும் வேட்டியை மடித்துக்கட்டிப்
போராடி வருகின்றனர். இவர்கள் போராட்டம் வேறு இலக்கை நோக்கிச் செல்லவேண்டும்
என்பதற்காக மத்திய அரசால் இது கையாளப்படுவதாக சில புத்திஜீவிகள்
சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். ஈழத் தமிழர் பிரச்சனைகளை இதுவரை காலமும்
முன்னெடுத்த பல தலைவர்கள் தற்போது நாட்டம் காட்டி வரும் விவகாரம் முல்லைப்
பெரியாறு அணையாகும்.
மத்திய அரசு நினைத்தால் இப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். ஆனால் இப் பிரச்சனையை ஊதிப் பூதாகரமாக்கிவிட்டதே தமிழ் உணர்வாளர்கள் ஈழத் தமிழரை மறந்து இப் போராட்டத்தில் குதிக்கத்தான் என சில புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். ஈழத் தமிழர்கள் விவகாரம் தற்போது சிறிது ஓரங்கட்டப்பட்டு இப் பிரச்சனை பூதாகரமாகக் காட்டப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை விககாரம் சூடு தணிந்தாலும் மேலும் ஒரு உள்நாட்டு விவகாரத்தை ஏவி விட மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் இவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இதனூடாக தய் தமிழகத்தில் ஈழ ஆதரவை இல்லாதொழிக்க மத்தியில் உள்ள சில சக்திகள் திட்டம் தீட்டியுள்ளதாகவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment