சிறிலங்காவிலிருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளால், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட தகவல்களில் இநத் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் அத் தகவல்கள் தெரிவிப்பதாக அறியவருகிறது.
உள்நாட்டில் விடுதலைப்புலிகளுடன் நடைபெற்று வந்த யுத்த நடவடிக்கைகளில் அமெரிக்காவின் உதவியை அவர் வெகுவாக நம்பியிருந்ததாகவும், அமெரிக்காவின் அனுசரணையுடனேயே விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தும் சர்வதேச உதவிகளைப் பெற முடியும் எனவும் அவர் நம்பியிருந்ததாகவும் அத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்காக அமெரிக்காவின் உதவிகளை அவர் நாடுவதில் அக்கறை கொண்டிருந்தது மட்டுமல்லாது, அவர் ஒரு அமெரிக்க விசுவாசி எனவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பரம்பரைச் செல்வந்தர்கள் என்பதால், இடதுசாரிச் சிந்தனைகள் மீது அவருக்கு நாட்டமில்லை எனவும் 2003ம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்கத் தூதுவராக இருந்த ஆஷ்லி வில்ஸ்அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மேலும் அறிய வருகிறது.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த போது அரச தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஒப்பந்தத்தின் பின் சமாதான நடவடிக்கைகளுக்கான செயற்பாடுகளில் இழுத்தடிப்புச் செய்தார் என பின்னர் விடுதலைப்புலிகள் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment