Tuesday, December 20, 2011

வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவி! போர் தொடுத்த இந்தியா தெரிவிப்பு!!

வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அவர்களின் எதிர்காலத்திற்கு உதவுவதற்கு இந்தியா எப்போதும் உதவத் தயாரக இருப்பதாக யாழ்.இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்தார்.

யாழ் சமூக ஒருமைப்பாட்டின் இளைஞர் பாசறையின் தேசிய ரீதியான தோழமை உன்னத தன்மை சங்கீத மாலைக் கலாச்சார நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


இந்திய அரசு போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கல்வித் திட்டம் உட்பட அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு என்றும் தயாராக இருப்பதாகவும் அதற்கான செயற்திட்டங்கள் கொள்கையளவில் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழப்போராட்டத்தில் இலங்கை அரசிற்கு பக்கபலமாக நின்று ஆயுதபலம் மற்றும் புலனாய்வுத்தகவல்கள் உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி தமிழ் இனத்தை அழித்துவிட்டு இன்று சிறுவர்களுக்கு உதவி புரிகின்றோம், வீடுகட்டிக் கொடுக்கின்றோம் என்று கதை கூறுகின்றனர்.

தமிழ் மக்களின் மனங்களில் இந்திய காங்கிரஸ் செய்த துரோகம் ஈழத் தமிழ் இனத்தினால் என்றுமே மன்னிக்கவோ மறக்கவோ முடியாத துரோகம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment