Thursday, December 22, 2011

படையினரின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்தாத ஆணைக்குழு அறிக்கை! - கனடா

இலங்கைப் படையினரின் சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை என கனடா தெரிவித்துள்ளது.

இவ்வாணைக்குழுவின் அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த கனடா, ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் புரூஸ் லெவி கொழும்பு ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு கூறுகையில், ‘டிசெம்பர் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையானது மிக அவசியமான அரசியல் நல்லிணக்கத்துக்கு முக்கிய பங்களிப்பாகும்.
அதேவேளை, அறிக்கை மீதான எமது ஆரம்ப, வாசிப்பின்படி, இலங்கைப் படையினரின் சில சக்திகளால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும்; பாரதூரமான சர்வதேச ‘பிழையான செயல்கள்’ தொடர்பாக போதியளவு கவனம் செலுத்தவில்லை என்ற பார்வைக்கு ஆதரவளிக்கின்றன.
இந்த அறிக்கை தொடர்பான பதிலளிப்பை துரிதப்படுத்துமாறு நாம் இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம்.
முக்கியமான பொறுப்புடைமை விவகாரம் குறித்து கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை கனடா தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது’ என்றார்.

No comments:

Post a Comment