யாழில் இடம்பெறவிருக்கும் இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறவிருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
இதன் ஏற்பாடுகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் இந்தியத் உயர்ஸ்தானிகராலயமும் செய்து வருவதாக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா
யாழில் இந்திய கலாச்சார மையம் அமைப்பதற்கான கட்டிட வரைபடம் யாழ். மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று யாழ்.
மாநகரசபை எல்லைக்குட்பட்ட நூலகத்தில் கட்டுவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட 10ஆவது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் பரதிபலிக்கும் வகையில் இந்தியக் கலாச்சார மையம் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
இந்த இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment