இறுதிக்கட்ட
யுத்தத்தின் போது, சிறிலங்கா இராணுவத்தினர் மனித உரிமைகளை மதிக்கும்
வகையில் நடந்துள்ளனர் என, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தெரிவித்திருக்கும்
நிலையில்,
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை இராணுவம் சுட்டக் கொன்றதாக லண்டன் ரெலிகிராப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள முன்னாள் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் அளித்துள்ள சாட்சியத்தினை ஆதாரமாக வைத்து இந்தத் தகவலை அந்த இணையம் வெளியிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. மேலும் அக் கொலைகளுக்கான உத்தரவு பாதுகாப்புத் துறையிடமிருந்தே கிடைக்கப் பெற்றதாகவும் அந்த முன்னாள் இராணுவ அதிகாரி தெரிவித்திருப்பதாகவும் தெரிவிக்ப்கபட்டிருக்கிறது. இதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உண்மை வெளிப்படவில்லை எனச் சனல் 4 தொலைக்காட்சியும் குறிப்பிட்டிருப்பதாக அறிய வருகிறது.

இது தொடர்பில் சனல் 4 ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்த �காலம் மக்ரே� பல விளக்கங்களைக் கொடுத்துள்ளதுடன், சிறிலங்கா மேற்கொண்டுள்ள போர்க் குற்றங்கள் தொடர்பான மேலும் பல புதிய ஆதாரங்களுடன் வரும் ஜனவரி மாதம் �தண்டிக்கப்படாத குற்றங்கள்� என்ற தலைப்பில் மீண்டும் ஒரு 30 நிமிட ஆவணப்படம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் இக்கற்றசாட்டுகள் அனைத்தம் சிறிலங்கா அரச தரப்பினால் மறுக்கப்பட்டிருக்கிறது. சிறிலங்காவில் மனித உரிமைகள் மீறப்படுவதாகத் தொடர்ந்து கூறிவரும் மேற்குலகம், சிறிலங்காவின் உள்நாட்டு அமைதிநிலையைக் குலைத்து, மற்றுமொரு எகிப்தாக அதனை உருவாக்க முயல்வதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment